பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anhydraemia

119

ankyloblepharon


தணிப்பிகள் : வியர்வை சுரப்பதைக் குறைக்கும் ஒரு வகை மருந்து.

anhydraemia : குருதித் திரவக்குறை நோய்; வரளி இரத்தம்; குருதிக் குறை : இரத்தத்தில் திரவம் போதிய அளவு இல்லா திருத்தல்.

anhydrosis : வியர்விலாமை.

anhydrous : நீரின்மை நோய்; வரண்ட நோய்; நீரற்ற நீரில்லா; நீரில் :உடலில் நீர் அடியோடு இல்லாது போதல்.

anicteric : மஞ்சட் காமாலையின்மை; மஞ்சள் நிறமின்மை : மஞ்சட்காமாலைக் கோளாறு இல்லாதிருத்தல்.

anileridine : அனிலரிடின் : அபினி போன்ற பண்புகள் கொண்ட ஒரு செயற்கை மருந்து.

anilitin : முதுமைத் தளர்ச்சி; கிழத்தனம்.

aniridia : விழித்திரைக் கோளாறு; விழிச் சுருக்கத் தசையின்மை; திரையின்மை : கண்ணில் விழித்திரை இல்லாதிருத்தல் அல்லது குறைபாடுடையதாக இருத்தல். இது பெரும்பாலும் பிறவிலேயே ஏற்படும் கோளாறு.

anischuria : சிறுநீர் ஒழுக்கு; சிறுநீர் அடக்க இயலாமை; சிறுநீர் கட்டற்ற ஒழுக்கு : சிறுநீரை அடக்க இயலா வண்ணம் கட்டற்ற முறையில் ஒழுகிக் கொண்டிருப்பது.

anisocoria : சமனிலாக் கண்மணி; ஒழுங்கற்ற கண் பார்வை : இரு கண்மணிகளின் விட்டம் ஏற்றத் தாழ்வுடன் இருத்தல்.

anisocytosis : சமனிலாச் சிவப்பணுக்கள்; சமனிலா செல்லியம்; அணுச் சீரின்மை : இரத்தச் சிவப்பணுக்கள் வடிவளவில் ஏற்றத் தாழ்வுடன் இருத்தல்.

anisocoria : சீரிலாமனி.

anisomelia : சமனிலா உறுப்புகள் : உடல் உறுப்புகள் சமச்சீரான நீளத்தில் இல்லாதிருத்தல்.

anisometropia : கண்னொளிக் கோட்ட மாறுபாடு; சமனிலா பார்வை வீக்கம்; ஒத்த பார்வையின்மை : இரு கண்களின் ஒளிக் கோட்டமும் மாறுபட்டிருத்தல்.

ankle : கணுக்கால்.

ankle clonus : கணுக்கால் தசைத் துடிப்பு; கணுக்கால் உதறல் : உள்ளங்காலில் அழுத்தம் அதிகரிப்பதன் காரணம் பாதம் பின் புறமாக வளைகிறபோது பின் கால் தசைப் பகுதி விரைவாக மாறி மாறிச் சுருக்கமும் தளர்வுமாகத் துடித்தல்.

ankylurethria : சிறுநீர் வடிகுழாய் அடைப்பு; சிறுநீர் வடிகுழாய் குறுக்கம் : சிறுநீர் வடிகுழாய் அடைப்பு அல்லது சிறுநீர் வடிகுழாய் குறுகி யிருப்பது.

ankyloblepharon : கண்ணிமை இணைவு ஒட்டிய இமை : கண்