பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antaphrodisiac

122

anterolateral


என்ற மருந்து, மயக்க மருந்துகளின் அனைத்து விளைவுகளையும் எதிர்மாறாக்குகிறது. சிலவகைத் தசைகளுக்கும், உறுப்புகளுக்குங்கூட இந்த எதிர்ப்புத் தன்மை உண்டு.

antaphrodisiac : சிற்றின்பம் தணிக்கும் மருந்து.

antazoline : எதிர்விழுப்புப் பொருள் : ஒவ்வாமைக்கு எதிர்ப்பு மருந்து. ஹிஸ்டமின் எனும் பொருளுக்கு எதிர்ப்பொருள்களில் ஒன்று.

antecedent : முன்னோடி;முன்னிகழ்ச்சி; முன்செயல்; முன்வினை : ஒரு குறிப்பிட்ட செயலுக்கு முன்னதாகவே நடக்கின்ற.

anteflexion : உறுப்பு முன் வளைத்தல்; முன்மடக்கம் : கருப்பையின் நிலையிலிருந்து பொதுவாக முன்னோக்கி வளைந்திருக்கும் ஒர் உறுப்பு.

ante-mortem : மரணத்திற்கு முந்திய; இறக்கு முன்; மரிக்கு முன் : மரணத்திற்கு முற்பட்ட நிலை.

antenatal : பேறுகாலத்திற்கு முற்பட்ட; முன்பேற்று; கருக்காலம்; பேற்று முன்நிலை : பிள்ளைப் பேற்றுக்கு முந்திய நிலை.

antenna : உணர்கொம்பு : பூச்சி வகையில் முன் தரையின் இரு பக்கங்களில் காணப்ப்டும் உணர்ச்சி உறுப்பு.

antepar : ஆன்டிப்பார் : பைப்பரசீன் அடங்கிய நீர்மம் அல்லது மாத்திரை.

antepartal : முன் குழந்டைப் பேற்றுக் காலம் : குழந்தைப் பேற்றுக்கு முன்பு குழந்தை பிறப்பதற்கு முன்பு நடக்கின்ற.

antepartum : பிறப்புக்கு முன்; மகப்பேற்றுக்கு முன்; பிறப்பு முன் நிலை :பொதுவாக நிறைமாத மகப்பேற்றுக்கு முந்திய 4 மாதங்கள். அதாவது, 6ஆம் மாதம் முதல் 9ஆம் மாதம் வரை.

anterior : முன்புறம், முன்பக்கம், முந்தைய : (1) காலத்தால் முற்பட்ட (2) இடத்தின் முன்னதாக, (3) உடலின் முன் பக்கம்.

anterior chamber : விழிமுன்னறை : பனிப்படலத்திற்கும் (கண்மணி அல்லது பாப்பா) விழிக் கரும்படலத்திற்கும் இடைப்பட்ட விழியறை.

anterior horncells : தண்டுவட முன் கொம்பு அணுக்கள் : தண்டு வட முன்கொம்பில் காணப்படும் நரம்பணுக்கள். இந்த அணுக்களிலிருந்து பிரியும் நரம்புயிழைகள் எலும்புத் தசைக்களுக்குள் செல்லும்.

anterolateral : முன்பக்கவாட்டில் : முன்பக்கமாகவும் அதே நேரத் தில் உடலின் மத்திய பாகத்திலிருந்து விலகியும் இருத்தல்.