பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antidiabetic

126

antifebrin


மருந்து. வயிற்றுப்போக்கு அறிகுறிகளை அறவே போக்குகின்ற மருந்து.

antidiabetic : நீரிழிவு மருத்துவம்; சர்க்கரை நோய் எதிர்ப்பி; நீரிழி வடக்கி : நீரிழிவு நோய்க்கு எதிரான மருத்துவச் சிகிச்சை முறைகளை இது குறிக்கிறது. இயக்குநீர் கணையச்சுரப்பு நீர் (இன்சுலின்) வாய்வழி மருந்துகள் ஆகியவை இதில் அடங்கும்.

antiemetic : வாந்தித்தடுப்பான்; வாந்தி மருந்து : வாந்தி மற்றும் உமட்டலைத் தடுக்கும் மருந்து, வாந்தி மற்றும் உமட்டலிலிருந்து நிவாரணம் தரும் மருந்து.

antidiphtheritic : தொண்டை அழற்சித் தடுப்பு மருத்துவம் : தொண்டை அழற்சி நோயைத் (டிப்தீரியா) தடுப்பதற்கான மருத்துவம் முறைகள் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

antidiuretic : சிறுநீர்க் கழிவுத் தடுப்பு மருத்துவம்; சிறுநீர்க்குறைப்பி; நீர் பெருக்கடக்கி : சிறுநீர் அளவுக்கு மீறிக் கழிவதைத் தடுப்பதற்கான மருத்துவ முறை.

antidote : மாற்று மருந்து; நச்சுமுறிப்பி; நச்சு முறி : நச்சுப் பொருளை முறிப்பதற்குக் கொடுக்கப்படும் மாற்று மருந்து. எடுத்துக் காட்டாக அமில நஞ்சினை முறிக்க சோடியம்பைக்கார்பனேட் தடுப்பு மருந்து போன்ற காரப் பொருட்களைக் கொடுத்தல்.

anti-dysenteric : அளைச்சல் தடுப்பு மருந்து : வயிற்றளைச்சலைத் தடுப்பதற்கான மருந்து.

antiembolic : குருதிக் குழாயடைப்புத் தடுப்பு மருந்து : பக்க வாதத்திற்குரிய நிலையில் குருதிக் குழாய்களில் குருதிக் கட்டி வழியடைப்பதைத் தடுக்கும் மருந்து.

antiemetic : வாந்தித் தடுப்பு மருந்து; வாந்தியடக்கி : குமட்ட லையும், வாந்தியையும் தடுக்கும் மருந்து.

antienzyme : இயக்குநீர் தடைப்பொருள்; இயக்கு நீர் எதிர்ப்பி :ஒர் இயக்குநீர் (என்சைம்) செயற்படுவதைத் தடுக்கும் பொருள். இது சீரணமண்டலத்தில் இருப்பதால், நோய்த் தடுப்பை எதிர்க்கிறது.

antiepileptic : வலிப்பு நோய் தடுப்பு மருந்து; வலிப்படக்கி மருந்து : காக்காய் வலிப்பு அடிக்கடி வருவதைக் குறைக்கும் மருந்து.

antifebrite : காய்ச்சல் தடுப்பு மருந்து; காய்சலடக்கி : காய்ச்சலைத் தடுக்கும் அல்லது குறைக்கும் மருந்து.

antifebrin : காய்ச்சல் எதிர்ப்பு மருந்து : காய்ச்சலைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும்