பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antiparasitic

129

antiRhesus


முக்கிய சமனப்படுத்தும் மருந்துகள். இவை நரம்பு சார்ந்த அல்லது உளவியல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளின் பக்க விளைவுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

antiparasitic : ஒட்டுயிர் ஒழிப்புப் பொருள்; ஒட்டுண்ணி எதிரி; ஒட்டுண்ணித்தடை : ஒட்டுண்ணிகளை அல்லது ஒட்டுயிர்களைத் தடுக்கிற அல்லது அழிக்கிற பொருள்.

antipellagra : தோல் வெடிப்பி நோய்த் தடை மருந்து : ஊட்டக் குறைவினால் ஏற்பட்டு, இறுதியில் மூளைக்கோளாறில் கொண்டு விடும் தோல்வெடிப்பு நோயைக் குணப்படுத்தும் மருந்து. வைட்டமின் B கலவையிலுள்ள நிக்கோட்டினிக் அமிலம் என்ற பகுதி இப்பணியைச் செய்கிறது.

antiperiodic : காலாந்தர நோய்த் தடுப்பு மருந்து : காய்ச்சல் (மலேரியா) போன்ற காலாந்தரங்களில் திரும்பத் திரும்ப வருகிற நோய்களைத் தடுப்பதற்கான மருந்து.

antiperistalsis : தசைச் சுருக்க எதிர் மாற்று அலை; எதிரலை வியக்கம் ; குடலலை எதிர்ப்பிகள் குடல் அசைவு மறிநிலை : உணவு சாரம் எளிதில் செல்லுவதற்கிசைவான உணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச் சுருக்க அலைகளின் இயல்பான இயக்கத்தை எதிர் மாறாக்குதல்.

antiphlogistic : வீக்கம் தணிப்பி.

antiprothrombin : குருதிக்கட்டுத் தடுப்பு : குருதி நாளங்களில் குருதி உறைவதைத் தடுத்தல்.

antiprotozoal : முந்து நுண்மத்தடை.

antipruritic : அரிப்புத் தடுப்பு மருந்து; நமைச்சலடக்கி; அரிப்புக் குறைப்பி; நமைச்சுத்தடை : தோலில் அரிப்பு ஏற்படுவதைக் குணப் படுத்தும் அல்லது தடுக்கும் மருந்து.

antipurpura : செந்நீலப் புள்ளித் தடுப்பு மருந்து : தோலின் மேல் செந்நீல நிறப்புள்ளிகள் கொண்ட நோய் ஏற்படுவதைத் தடுக்கும் மருந்து. வைட்டமின் P இந்தப் பணியைச் செய்கிறது.

antipyretic : காய்ச்சல் குறைப்பான் மருந்து; சுரமடக்கி; காய்ச்சலடக்கி; சுரத்தடை : குழந்தைக் கணை (ரிக்கட்ஸ்) நோயைத் தடுக்கும் மருந்து. வைட்டமின் D இப்பணியைச் செய்கிறது.

antirabic : நாய்க்கடி நோய்த் தடை.

antirachitic : எலு சிதைவுத்தடை.

antiRhesus : உறை ஊக்க எதிர்ப்புக் கூறு : குருதியில் உறைமம்