பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anxiolytics

133

apex


கவலை சில சமயம் மரணம் விளைவிக்கிறது.

anxiolytics : கவலைக்குறைப்பு மருந்து : கவலையைக் குறைக்கும் மருந்து.

aorta : பெருந்தமனி : இதயத்தின் இடது மேல் அறையில் இருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.

பெருந்தமனி

aortitis : பெருந்தமனி வீக்கம்; பெருந்தமனி அழற்சி : இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக் குழாயில் ஏற்படும் வீக்கம்.

apathetic : ஈடுபாடில்ல.

apathy : உணர்ச்சியின்மை; உணர்விழப்பு; உணர்வற்ற; ஈடுபாடின்மை : இயல்புக்கு மீறி அக்கறையின்றி இருத்தல்; செயலற்ற தன்மை; பாராமுகமாக இருத்தல்.

apepsia : வயிற்றுமந்தம்; செறிமானமின்மை; செமிப்புக் குறை : செமிக்கும் ஆற்றல் குறைவாக இருத்தல்.

aperient(peritive) : பேதி மருந்து; மலமிளக்கி : மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து.

aperient(peritive) : பேதி மருந்து; மலமிளக்கி : மலத்தை இளக்கிப் பேதியாகும்படி செய்கிற மருந்து.

aperitif : பசியெழுப்பும் நீர்மம் : பசியூட்டும் மதுபானம்.

aperistalsis : குடல் முடக்கு வாதம்; அலைவின்மை : குடலில் உணவு சாரம் எளிதில் செல்லுவதற்கிசைவான உணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள் இல்லாதிருத்தல்.

APERITIVE : பசியூட்டி :பசியெழுப்பும் பொருள். பசியூட்டும் மதுபானம்.

Apert's syndrome : ஆபெர்ட் நோயியம் : இது ஒரு குடும்பப் பாரம்பரிய நோய். இந்நோயுள்ளவருக்கு கபால எலும்பு நலிவுற்றிருக்கும். வாதத்தின் கால் விரல்கள் போன்று விரல்கள் இடைத்தோலால் ஒன்றுபட்டு இணைந்திருக்கும், ஃபிரெஞ்சு குழந்தை நோய் வல்லுநர் ஈஜீன் ஆபெர்ட் என்பவர் அந்த நோயினத்தைக் கண்டுபிடித்தார்.

aperture : துளை : இடைவெளி, நுண்ணோக்கி போன்ற ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடுருவிச் செல்லும் இடையிடம்.

apex : உச்சி; மேல் நுனி; முகடு முனை; கோடி; முடிவிடம்; நுரை யீரல் உச்சி : காரை எலும்புக்கு மேல் 2-3 செ.மீ. உயரம் தாண்டியுள்ள