பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aramine

141

arginino-succinuria


இது மூளையையும் முதுகுத் தண்டினையும் மூடியிருக்கும்.

aramine : ஆராமின் : 'மெட்டாராமினால்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

arbor : கிளையுரு : கிளைபோல் உருவெடுத்தல்.

arborization : மரத்தோற்ற நரம்பிழை; கிளை விரிவு : மரத்தைப் போன்ற தோற்றமுடைய நரம்பிழை அமைப்பு.

arborvitae : சிறுமூளை வரியம்.

arboviruses : கொசுவழி பரவும் நோய்க் கிருமிகள்; ஆர்போ அதி நுண்ணுயிர் : ஒட்டுத்தோடுடைய இணைப்புடன் உயிரினங்களினால் பரவும் RNA என்ற நோய்க்கிருமிகள். இதில் கொசுவினால் பரவும் நோய்க்கிருமிகளும் அடங்கும். மஞ்சள் காய்ச்சல், முட்டுகளில் கடும் நோவு உண்டு பண்ணும் கொள்ளைக் காய்ச்சல் (டெங்கு காய்ச்சல்) போன்ற நோய்கள் இவற்றினால் பரவுகின்றன.

arc : வளைவு.

arcade : வளைவுத் தொகுதி.

arch : வளைவு.

arcuate : வில் வடிவ.

arcuation : வளைதல்; வளைவு.

arcus :வளைவு.

arcus senilis : மூப்புப்படலம் : வயது ஏற ஏற கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.

area : பரப்பு; பகுதி.

arenavirus : அரினாவைரஸ்.

areola : மார்பு முகட்டு வட்டம்; முலைக்காம்புத் தோல்; குறு பரப்பு : மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம்.

areola. mammary : நகில் வளையம்; சுரைவளையம்.

azeolar : சுரைவளைய.

artomad , ஆர்ஃபோனாட் : 'டிரிமெட்டாஃபான்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

arginase : ஆர்கினேஸ் : நுரையீரல், சிறுநீரகம், மண்ணிரல், ஆகியவற்றில் காணப்படும் ஒரு வகை இயக்கு நீர் (என்சைம்). இது ஆர்கினைன் என்ற பொருளை ஆர்னித்தைன், மூத்திரை ஆகிய பொருள்களாகப் பிரிக்கிறது.

arginine : ஆர்கினைன் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. கடுமையான நுரையீரல் நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.

arginino-succinuria : ஆர்கினினோ-சக்சினுாரியா : சிறுநீரில் ஆர்கினைன், சக்சினிக் அமிலம் ஆகியவை அடங்கியிருத்தல்.