பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

மேலும், பேராசிரியர் டாக்டர் லலிதா காமேசுவரன் அவர்கள் 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' நூலுக்கு வழங்கியிருந்த 'ஆய்வுரை'யையும் அந்நூலின் விரிவாக உருவாகியுள்ள இந்நூலிலும் இடம்பெறச் செய்துள்ளேன். இவர்கட்கெல்லாம் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.

இந்நூல் உருவாக்கத்துக்கு என் ஆருயிர் நண்பர் மறைந்த இரா. நடராசனார் அவர்கட்கும், 'மருத்துவ மலர்' சிறப்பாசிரியர் இலக்கிய மருத்துவர் ந. கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கும் இதழ்கள் வாயிலாகவும் தம் நூல்கள் மூலமும் மருத்துவ அறிவைப் பரப்பிவரும் மருத்துவர் கு. கணேசன் அவர்கட்கும் நான் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

இந்நூல் உருவாக்கத்தில் எல்லா வகையிலும் எனக்குத் தோன்றாத் துணையாக இருந்துவரும் என் துணைவியார் திருமதி சித்தை செளதா அவர்கட்கும், என் மகன் மருத்துவர் மு. செம்மல் அவர்கட்கும், மிகுந்த பொறுமையோடு சிறப்பாக கணிணியில் ஒளிஅச்சுப் பதிவம் உருவாக்கித் தந்த ஸ்ரீ பிரிண்ட் ஹவுஸ் திரு. கோபிநாத் அவர்கட்கும், திருமதி ந. லட்சுமி அவர்கட்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். அவ்வாறே மிக அழகிய வடிவில் அட்டைப் படம் வடித்துத் தந்த சுவாதி சாஃப்ட் சொலுஷன் நிறுவனர் திரு. எஸ். மகேந்திரகுமார் அவர்கட்கும் அழகிய முறையில் அச்சிட்ட காரிஸ் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரித்தாகும்.

எனது முந்தைய படைப்புகளைப் போன்றே இந்த அகராதி நூலையும் தமிழுலகம் ஏற்று ஊக்குவிக்கும் என்பதில் எனக்கு எப்போதும் முழு நம்பிக்கை உண்டு.

மணவை முஸ்தபா
நூலாசிரியர்