பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

asphyxiate

151

astereognosis


போது இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

asphyxiate : மூச்சுத்திணறச் செய்தல்.

asphyxiation : திணறல்; மூச்சுத்தடை.

asphyxiator : மூச்சுமுட்டச் செய்பவர்.

aspiration : உறிஞ்சியிழுத்தல்; உறிஞ்சல் : உடலில் தங்கியுள்ள திரவங்களை உறிஞ்சி இழுத்தல்.

aspirator : உடல்நீர் உறிஞ்சி; உறிஞ்சி : உடலில் தங்கியுள்ள நீர்மங்களை உறிஞ்சி இழுக்கும் ஆற்றலுடைய மருந்து.

aspirin : ஆஸ்பிரின் (வெப்பாற்றி): அசிட்டில் சாலிசிலிக் அமிலம், காய்ச்சலையும், நோய்களையும் அகற்றும் மருந்து.

asplenia : மண்ணீரலின்மை, மண்ணிரல் அற்ற.

assay : கணிப்பு.

assessement : மதிப்பீடு.

assimilation : ஒன்றிப்போதல்; செறிமானம்; திசு உணவு மாற்றம்; தன்மயமாதல்; செரிமயம் : ஏற்கனவே செரிமானமடைந்த உணவுப் பொருள்களைத் திசுக்கள் தன்னியற்படுத்திப் பயன் படுத்திக்கொள்ளுதல்.

assistant : துணைவர்; உதவியாளர் : ஒரு பணியைச் செய்வதற்கு உதவுபவர், துணை நிற்பவர்.

assisted ventilation : செயற்கைச் சுவாசம் : சுவாசிக்கச் சிரமப்படும் குழந்தைகளுக்கு எந்திரத்தின் மூலம் சுவாசிப்பதற்கு உதவுதல்.

association : எண்ண இயைபு; பிணைப்பு; இணைவு கூட்டு : உளவியலில் பயன்படுத்தப்படும் சொல் "எண்ண இயைபு' என்ற தத்துவத்தின்படி, எண்ணங்களும், உணர்ச்சிகளும், அசைவுகளும் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன.

assortment : வகைப்படுத்துதல்.

astasia : நிற்க இயலாமை : தசைகளின் ஒத்திசையாமை காரணமாக கால்களால் நிற்க இயலாத நிலைமை.

asteatosis : வறட்டுத்தோல் நோய்; செதில் தோல் நோய் : தோலில் உள்ள கொழுப்புச் சுரப்பிகள் குறைவாகச் சுரப்பதால் தோல் மினுமினுப்புக் குறைந்து வறட்சியடைந்து விடும்; மேல்தோல் செதில் செதில்களாக உரியும்.

astemizole : அஸ்டெமிசோல்: H1 ஏற்பணு எதிர்ப்பியாகச் செயல்படும் மருந்து. ஒவ்வாமை காரணமாக ஏற்படும் அரிப்பு நோய், மூக்கொழுகல் போன்றவற்றைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்து.

astereognosis : வடிவக் குருடு : பொருள்களின் வடிவங்களையும்,