பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

atherogenesis

155

athyria


நாளத்தில் உருவாகின்ற இரத்த உறைக்கட்டி முழுமையாகவோ, சில துகள்களாகவோ இரத்தச் சுழற்சியில் கலந்து உடலின் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லுதல்.

atherogenesis : இரத்த உறைக் கட்டியாக்கம் : இரத்தத் தமனி நாளச் சுவர்களில் இரத்த உறைக் கட்டி உருவாதல்.

atheroma : தமனித் தடிப்பு; தமனி வீக்கம் : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங்களாகிய தமனிகளின் நெருங்கிய படலங்கள் படிந்திருத்தல், இரத்தத்தில் மிகப்பெருமளவில் கொழுப்புப் பொருள் (கொலஸ்டிரால்) அடங்கியிருப்பது அல்லது சர்க்கரையை அளவுக்கு அதிக மாக நுகர்தல் இதற்குக் காரணமாக இருக்கலாம். நெஞ்சுப் பையைச் சுற்றிய தமனிகளில் இது படிந்திருந்தால் நெஞ்சுப்பைக் குருதி நாளங்களில் இரத்தம் உறைதல் ஏற்படும்.

atheromatosis : இரத்த உறைக்கட்டிச் சிதைவு : இரத்தத் தமனி நாளங்களில் இரத்த உறைக்கட்டி உருவாகி சிறு சிறு துகள்களாகச் சிதைதல்.

atherosclerosis : தமனித் தடிப்பு இறுக்கம்; பெருந்தமனித் தடிப்பு : தமனிகள் தடித்தும் குறுக்கமாகவும் இருத்தல்.

athetosis : உறுப்பு நடுக்கம்; சுழல்வாதம் : மூளையில் நைவுப்புண் ஏற்படுவதன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி அசைந்து (நடுங்கி) கொண்டிருத்தல்.

athlete's foot : பாதத் தடிப்பு நோய்; பாதப்படை : ஒருவகைப் பூஞ்சணத்தினால் விளையாட்டு வீரர்களின் பாதத் தோலில் முரட்டுத்தனமும் எரிச்சலும் உண்டாக்கும் நோய்.

athletic heart : வலிமிகு இதயம்; உடற்பயிற்சியாளர் இதயம் : கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றவரின் இதயம். இவர்களுடைய இதயத்தின் இடது கீழறையிலிருந்து உடலுக்கு இரத்தம் செலுத்தப்படும் அளவு மற்றவர்கட்கு அதிகமாக இருக்கும். இதயத்தின் இடது கீழறைச் சுவர் தடித்துக் கடினப் பட்டிருக்கும்.

athymia : தைமாஸ் சுரப்பியின்மை : தைமாஸ் சுரப்பி இல்லாமை.

athyreosis : தைராய்டு குறை : தைராய்டு சுரப்பி 'தைராக்சின்' இயக்கு நீரைக் குறைவாகச் சுரத்தல்.

athyria : தைராய்டு குறைநிலை : தைராய்டு இயக்கு நீர் இரத்தத்தில் குறைவாக இருக்கும் நிலை.