பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ativan

156

atopic syndrome


ativan : ஆட்டிவன் : 'லோராஸ்பாம்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

atlantoaxial : அட்லஸ் அச்செலும்பு : அட்லஸ் எலும்பையும் அச்செலும்பையும் சார்ந்த.

atlas : அட்லஸ் எலும்பு : முதல் கழுத்து முள் எலும்பு.

atlas bone : கழுத்தெலும்பு : மண்டையோட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப பூட்டு.

atom : அணு : ஒருதனிமத்தின் மிக மிகச் சிறிய கூறு அல்லது துகள். இது தனித்தியங்கக் கூடியது. ஒரே தனிமத்தின் அல்லது இன்னொரு தனிமத்தின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களுடன் ஒருங்கி ணைந்து இயங்கவும் வல்லது. அணு எடை என்பது, ஹைட்ரஜனின் ஓர் அணுவின் எடையுடன் ஒப்பிடும் போது ஓர் அணுவின் எடையாகும்.

atomic : அணுசார்.

atomization : அணுவாக்குதல்; நுண்திவலையாக்கம் : நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.

atomizer : அணுவாக்கக்கருவி; தெளிப்பான் ; அணுவாக்கி : நீர்மங்களை நுண் திவலைகளாக்கும் கருவி.

atmosphere : வளிமண்ட லம்; வாயுமண்டலம்; காற்றுமண்டலம் : பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம்.

atmospheric : காற்று மண்டலம் சார்ந்த; வளிமண்டலம் தொடர்புள்ள; காற்று மண்டலத்தில் வாழும்; காற்று மண்டலத்தில் உள்ள.

atocia : பெண்மலடு : குழந்தைப் பேறின்மை உள்ள பெண்.

atomy : எலும்புக் கூடு; தேய்வுடல்.

atonia : முறுகிழப்பு; உறுதியற்ற.

atonic : உறுதிகுன்றிய; தளர் : உறுதியற்ற; வலிமையற்ற.

atony : வலுக்குறை; உறுதிக்குறை; பலக்குறைவு; உரன் குறைவு : வலிமை குறைந்த.

atopic : ஒவ்வாமைக் குணமுடைய : மரபு வழி ஒவ்வாமை உள்ள அல்லது ஒவ்வாமை தொடர்புடைய.

Atopicdermatts : ஒவ்வாமைத் தோலழற்சி : ஒவ்வாமை காரணமாகத் தோலில் ஏற்படும் அழற்சி நிலை. தோல் சிவந்து காணப்படும். அரிப்பு உண்டாகும். சிறுபுண்கள் தோன்றும். அவற்றில சீழ்சேரும். காய்ச்சலும் ஏற்படலாம். இயக்க ஊக்கிக் களிம்புகளைப் பயன்படுத்தினால் அழற்சி குணமாகும்.

atopic syndrome : மரபு நோய் : ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு இளம்பிள்ளைப் படைநோய், ஈளைநோய், சளிக்காய்ச்சல்