பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

atopy

157

atrioventricularis com...


ஆகிய நோய்கள் பரம்பரையாகவோ தனித்தனியாகவோ, அல்லது மூன்றும் சேர்ந்தோ பீடித்தல்.

atopy : ஒவ்வாத; ஒவ்வாமை; மரபுவழி ஒவ்வாமை; வம்சாவழி ஒவ்வாமை; பாரம்பரிய ஒவ்வாமை : சுற்றுச்சூழலிலிருந்து அன்றாடம் நம்மை வந்தடையும் பொருள்களில் ஏதேனும் ஒன்று நமக்கு ஒவ்வாதபோது அதற்குரிய எதிர்ப்பு வினையாக இரத்தத்தில் தடுப்பாற்றல் புரதங்கள் மிகை யாகும் பண்பு பரம்பரையாகவே இரத்தத்தில் இருப்பது. ஆஸ்துமா, ஒவ்வாமைத் தோலழற்சி, மூக்கொழுகுதல் ஆகியவை ஒவ்வாமை காரணமாக வருகின்ற நோய்களாகும்.

atoxic : நச்சற்ற; நச்சில்லாத; விஷமில்லாத; நஞ்சு அற்ற : நச்சு இல்லாத.

atopognosia : புலனுணர்வின்மை; புலனறிவு உணர்வின்மை : உடலில் ஏற்படும் உணர்ச்சியைக் குறிப்பிட்டுக் கூற இயலாமை அல்லது உணர இயலாமை.

ATP : ஏ.டி.பி ; அடினோசின் டிரை பாஸ்பேட் : தாவரங்களின் இலைகளில் ஒளிச்சேர்க்கை நடக்கும்போது அதற்கு உதவும் ஒரு வகை நொதி.

atresia : துளையற்ற; துளை வளராமை; துளை மூடிய : உடலில் அல்லது உடலுறுப்பில் இயல்பாக இருக்க வேண்டிய துளை பிறவியிலேயே இல்லாதிருத்தல் அல்லது அத்துளை மூடியிருத்தல்.

atreomegaly : இதய மேலறைப் பெருக்கம்; இதய மேலறை வீக்கம் : இதய மேலறை (ஏட்ரியம்) வீங்கியிருக்கும் நிலைமை.

atrionatriuretic peptide : ஏட்ரியோநேட்ரியூரைடிக் பெப்டைடு : ஒரு வகை பெப்டைடு இயக்கு நீர். இதயத் தசையணுக்களிலிருந்து வெளியாகும் ஏட்ரியோ பெப்டி ஜெனிலிருந்து தயாராகும் இயக்கு நீர். இது சோடியம் அயனிகளின் ஓட்டத்தைக் குறைக்கக் கூடியது. கால்சியம் அயனிகள் ஒட்டத்தை அதிகப்படுத்தக் கூடியது. சிறுநீரகத்தில் உள்ள தொகுப்புச் குழலில் சோடியம் உறிஞ்சுதலைத் தடுக்கக்கூடியது.

atrioseptopexy : இதய மேலறை இடைச்சுவர் சீரமைப்பு : இதய மேலறையில் ஏற்பட்டுள்ள துளையை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்வது அல்லது சீரமைத்தல்.

atrioventricularis communis : இதய மேலறைக் கீழறை இடைத்துளை : இது ஒரு பிறவிக் குறைபாடு. கருவளர்ச்சியின்போது இதய அறைகள் வளர்ச்சி அடையும்போது இவ்வாறு இடைச்சுவரில் துளைவிழுவது.