பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

atrium

158

attraction


atrium ; இதயவாயில்; இதய ஊற்றறை; இதயமேலறை : இதயத்தின் இரண்டு மேல் குழிவு வாயில்களில் ஒன்று.

atromid : ஆட்ரோமிட் : குளோஃபிப்ரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

atrophic : கூம்பிய.

atropphic rhinitis : மூக்குச் சளிச்சவ்வு தேய்வு : மூக்கின் சளிச்சவ்வு சத்தின்றித் தேய்ந்து போதல்.

atrophy : உடல் நலிவு; உடல் மெலிவு; செயல் திறன் இழப்பு; தேய்வு; சுருங்குதல்; கூம்புதல் : உடல் சத்தின்றி மெலிந்து போதல்; சத்தில்லாமல் தேய்ந்து விடுதல்; ஆளாமைத் தேய்வு.

atrophy, muscular : தசைக் கூம்பல்.

atrophy, uptic : பார்வை நரம்பிழைப்பு.

atropine : நச்சுக்காரம் : கொடிய நச்சுப் பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து. மைய நரம்பு மண்டலத்தைச் சமனப்படுத்தும் இயல்புடையது. இதயத் துடிப்பை விரைவுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

ATS (antitetanus serum) : ஏ.டி.எஸ் நரம்பிசிவு நோய்த்தடுப்பு மருந்து : நரம்பிசிவு நோயை எதிர்க்கும் பொருள். நரம்பிசிவு நோயை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் திறனை உண்டாக்குகிறது.

attack : நோய்த்தாக்கம்; தாக்கு : நோய் தாக்கும் நிலை. திடீரென நோய்த் தாக்குதல்.

ஆடம்ஸ்டோக் நோய்த் தாக்கம் : எவ்வித முன் நோய்க் குறிகளும் இல்லாமல் திடீரென தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படும்; இதயத் துடிப்பு தற்காலிகமாக நிற்கும்.

attenuation : நுண்ணுயிராக்கம் : நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகத் தூண்டும் முறை. அவற்றைப் பின்னர், அம்மைப்பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

attack, cereberal : மூளைத் தாக்கம்.

attack, heart : இதயத்தாக்கம்.

attendant : துணையாள்.

attenuate : குறை.

attic : நடுக்காது மேலறை : நடுச்காதில் சுத்தி எலும்பும் பட்டை எலும்பும் உள்ள இடம்.

attitude : மனப்பான்மை; உள நோக்கு; நிலை : பழகிப்போன சிந்தனை முறை பழக்க நடவடிக்கை.

attraction : கவர்ச்சி; கவர்தல்; ஈர்த்தல் : இரண்டு பொருள்கள்