பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

audiovisual

160

auriculotermporal syn...


audiovisual : ஒலி ஒளிக் காட்சி; கேட்பொளிக் காட்சி; ஒலி ஒளி ஒருங்கு சார்ந்த :ஒலி உணர்வும் ஒளி உணர்வும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும் உணர்வு.

audition : கேள்திறன்; கேட்புத் திறன்; செவித்திறன்; செவி கேட்டல் :கேட்கும் திறன் பெற்றுள்ள செவியால் கேட்பது.

Auerbachs : ஆயர்பேக் நரம்புப் பின்னல் : மத்திய உணவுக் குழலிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் உணவுப் பாதைத் தசையில் காணப்படும் தானியங்கி நரம்புப் பின்னல். இந்த நரம்புப் பின்னல்தான் குடல் தசை அலைவுகளைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உதவுகிறது. ஜெர்மன் நாட்டைச் சார்ந்த உடலியலாளர் லியோபோல்டு அயர்பேக் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.

augmentation : ஆக்மென்டின் : அமாக்சிசிலின், கிளாவுலானிக் அமிலம் கலந்த மருந்து.

augmentation therapy : வளர்சிகிச்சை : ஆல்பா ஆன்டிடிரிப்சின் குறைபாடு உடைய நோயாளிகளுக்கு புரோட்டி யேஸ் எதிர்பொருளின் செயல் ஆக்கத்தை மேம்படுத்துவதற்காக 'புரோலேசின்' மருந்தைச் செலுத்துதல்.

aura : முன்னுணர்வு; சூசனை; முன்னம் : காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.

aural : காதுசார்ந்த; செவி.

aureomycin : ஆர்யோமைசின் : நச்சுக் காய்ச்சல் முதலிய நோய் களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.

auric : தங்கம் சார்ந்த; பொன்னைச் சார்ந்த : தங்கம் அடங்கிய வேதியியல் பொருள்.

auricle : 1. காதுமடல் : புறக்காதின் ம ட ல் , 2. இதய மேலறை : இதயத்தின் .மேல் அறைகள் இரண்டினுள் ஒன்று.

இதய மேலறை

auricular : காதுத் துடிப்பு : காதுத்துளையில் ஏற்படும் அதிர்வு.

auricularis : காதைச் சார்ந்த; செவியைச் சேர்ந்த; காதுமடலைச் சார்ந்த :

auriculotermporal syndrome : காதுப் பொட்டெலும்பு நோயியம் : காதுப்பொட்டெலும்பு நரம்புக் கோளாறால் உண்டாகின்ற நோய் வகை. சாப்பிடும்போது வியர்த்தலும் உடல் சிவத்தலும் ஏற்படும்.