பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

auriculoventricular

161

australian lift


auriculoventricular : இதய மேலறை-கீழறை சார்ந்த.

aurilave : காது கழுவு கருவி : காதுகளைக் கழுவிச் சுத்தப் படுத்துவதற்குப் பயன்படும் கருவி.

auris : காது: செவி : கேட்கும் திறனுள்ள உறுப்பு. இது மூன்று பகுதிகளை உடையது. வெளிச்செவி, நடுச்செவி, உட்செவி என அவை அழைக்கப்படுகின்றன. வெளிச்செவியில் காது மடலும் செவித்துளையும் அடங்கும். நடுச்செவியில் மூன்று எலும்புகள் அடுத்தடுத்துள்ளன. நடுச்செவிக்கும் வெளிச்செவிக்கும் நடுவில் 'செவிப்பறை' எனும் சவ்வு உள்ளது. உட்செவியில் நத்தை எலும்பு, அரைவட்டக் குழல்கள், செவிநரம்பு உள்ளன.

auriscope : காது சோதனைக் கருவி; செவிகாட்டி : காதுகளைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்கான ஒரு கருவி. இதில் உருப்பெருக்கிக் காட்டும் சாதனமும், ஒளியூட்டும் சாதனமும் இணைந்திருக்கும்.

aurothioglucose : ஆரோதியா குளுக்கோஸ் : பொன்னால் தயாரிக்கப்பட்ட மருந்து.

aurothiomalate : ஆரோதியா மாலேட் : கடுமையான வாத மூட்டு வலியைக் குணப்படுத்து வதற்கு ஊசி மூலம் செலுத்தப்படும் பொன் கலவை மருந்து. இந்த மருந்தைச் செலுத்துவதற்கு முன்பு சிறு நீரில் புரதம் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்.

ausculation : அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல்; கேட்புணர்வு; ஒலியுணர்வு : நோயின் காரணத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல். உடலின் உள் உறுப்புகளின் அசைவின் தன்மையைக் கேட்டு நோயறிதல். உடலில் காதை வைத்து நேரடியாகவோ, இதயத்துடிப்பு மானியை வைத்தோ, இதனைக் கேட்கலாம்.

Australia antigen : கல்லீரல் அழற்சிக் காப்புமூலம் : கல்லீரல் அழற்சி மருத்துவத்திற்கான ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள். பல நாடுகளில் 'ந' நோய்க் கிருமி குருதியில் காணப்படுகிறது. இந்த நோய்க் கிருமி யுடைய இரத்தத்தை மற்றவர்களுக்குச் செலுத்தினால் அவர்களுக்கு கல்லீரல் அழற்சி உண்டாகும். எனவே, இந்த வகை குருதியைச் செலுத்து வதைத் தவிர்க்க வேண்டும்.

australian lift : ஆஸ்திரேலியத் தூக்கும் முறை : கனமான