பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

autolesion

164

automaticity


நச்சூட்டம். இந்தப் பொருள்கள் நோயுற்ற அல்லது மாண்டுபோன திசுக்களிலிருந்து தோன்றக் கூடும்.

autolesion : தன் சிதைவுப் புண்; தன் நைவுப்புண் : தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது.

autolets : பீற்று மருந்தூசி : இன்சுலின் போன்ற மருந்துகளை நோயாளிகள் தாங்களாகவே ஊசி மூலம் செலுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட பீற்று மருந்துசி (சிரிஞ்சு).

autologous : சுயப்பண்பு; சுயமாக; தனக்குத்தானே.

autologous blood transfusion : சுய இரத்ததானம்; சுய இரத்த மேற்றல் :ஒருவரிடமிருந்து இரத்தத்தைப் பெற்று மீண்டும் அவருக்கே அந்த இரத்தத்தை ஏற்றுதல். சில அறுவைச்சிகிச்சைகளின்போது நோயாளிக்குத் தேவைப்படும் இரத்தத்தை, அறுவை சிகிச்சைக்கு 3 வாரங்களுக்கு முன்பே, அந்த நோயாளியின் இரத்தத்தைத் தானமாகப்பெற்று, இரத்த வங்கியில் சேமித்துக் கொண்டு, பின்பு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படும் பொழுது அந்த இரத்தத்தை மீண்டும் அவருக்கே செலுத்தும் முறை. இதனால் இரத்தம் மூலம் பரவுகின்ற எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பில்லை.

autologous bone marrow transfusion : சுய எலும்பு மஜ்ஜை ஏற்றல் அல்லது தருதல் : இரத்தப் புற்று நோய்க்குத் தரப்படும் நடுவகை சிகிச்சை முறை. நோயாளி நலமாக உள்ளபோது அவருடைய எலும்பு மஜ்ஜையைப் பெற்று, பதப்படுத்திக் கொண்டு மீண்டும் அவருக்கு இரத்தப் புற்று நோய் தாக்கும்போது, இந்த எலும்பு மஜ்ஜையை அவருக்கே செலுத்துவார்கள். இதனால் இரத்தப் புற்றுநோய் கட்டுப்படும்.

autolysin : தன்னழிப்பான் automaticity: தான் உருவான உடலின் அணுக்களையும் திசுக்களையும் அழிக்கின்ற உடற்காப்பு மூலம்.

autolysis : உயிரணு அழிவு; தன்னழிவு; தன்முறிவு : உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலிருந்து வடியும் ஊன் நீரால் அழிதல்.

automatic : தானே இயங்குகிற; தானியங்கும் : தன்விருப்பமில் லாமல் பழக்கத்தினால் தானே இயங்குதல்.

automaticity : தன்னியக்கம்; தானியங்கி : தானே இயங்குகின்ற நிலை, விருப்பாற்றலுக்கு உட்