பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

automatism

165

autoregulation


படாத நிலை, புறத் தூண்டலற்ற நிலை, ஒர் உடலணு எவ்வித புறத்துண்டலின்றி திசுத் துடிப்பைத் தோற்றுவிக்கும் திறன்.

automatism : தன்னியக்கம்; தானியக்கம் : தன்னறிவின்றிப் பழக் கத்தினால் தானே இயங்கும் நடத்தை முறை.

automation : உணர்ச்சி விழிப்பற்ற நிலையில், தசை நரம்புகள் தானாகவே இயங்குதல்.

autonomic : தன்னியக்கமுடைமை; தன்னியக்க உறுப்புகள் : தானே இயங்கும் தன்மை, தானியக்க நரம்பு மண்டலம், பரிவு நரம்புகளினா லானது. இது நரம்பு உயிரணுக்கள், இழைமங்கள் ஆகியவற்றினாலானவை. இவற்றை தன் விருப்பப்படி கட்டுப்படுத்த இயலாது. இவை உடலின் அனிச்சைச் செயல்கள் தொடர்பானவை.

autonomous : தன்னியக்க.

autophagosome : உள்திசுப் பாய்ம வெற்றிடம் : ஒர் அணுவில் உள்ள திசு உள்பாய்மத்தில் காணப்படும் சிறு வெற்றிடம். திசு உள்பாய்மப் பொருள்களையே இதுவும் கொண்டிருக்கும். இது திசுவுள் செரிமான அமைப்புடன் இணைந்துவிடும் தன்மையுடையது.

autophagous : தன்னூண் சார்ந்த : தன் தசையைத் தானே தின்று செமிக்கிற.

autophagy : தன்னூண் உடைமை : உடலிலுள்ள இழைமங்கள் தம்மைத்தாமே உறிஞ்சிக் கொண்டு உயிர் வாழ்தல்.

autophony : தன் குரலுணர்வு : தன் குரலின் எதிரொலியைத் தானே கேட்டல்.

autoplasty : உயிர்க் கூறொட்டு முறை; தன்னமைப்பு : நலம் குன்றிய பகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்களை வைத்துக் குணப்படுத்தும் முறை.

autopsy : பிணப்பரிசோதனை; பிணி கூற்றாய்வு; சடல ஆய்வு : நோய்க் காரணங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்திற்காக இறந்த உடலைப் பரிசோதனை செய்தல்.

autoregulation : தன்னியக்கச் சீரமைப்பு : 1. தன்னை அழிக்க வரும் பொருளை தானே அழித்து தன்னுடைய இயக்கம் சீராக இருப்பதைக் கண் காணித்துக் கொள்ளும் உயிரியியல் பண்பு. 2. தமனி நாளத்தில் இரத்த அழுத்த மாறுபாடு இருந்தாலும் ஒர் உறுப்போ, திசுவோ தனக்குத் தேவையான இரத்தத்தை நிலையாகப் பெற்றுக் கொள்ளும் அக நிலைப் பண்பு.