பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



B

B : குருதிக் குறியீடு; அடையாளம் : இரத்தம், நோய் நுண்மம், காரப் பொருள் ஆகியவற்றைக் குறிக்கும் ஆங்கிலக் குறியீடு.

Ba : ஒரு குறியீடு; அடையாளம் : 'பேரியம்' எனும் சொற்களைக் குறிக்கின்ற அடையாளக் குறி.

Babcock's : பேப்காக், பேப்காக் அறுவை மருத்துவம் : அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் பேப்காக் கண்டுபிடித்த ஒரு வகை அறுவை மருத்துவ முறை. சிரைச்சுருள் நோயைக் குணப்படுத்த சபீனஸ் சிரை நாளத்தை அடியோடு அகற்றும் முறை.

Babes-Ernst : பேபஸ்-எர்னஸ்ட் : மணல் துகள் போன்றிருக்கும் உடல் அனுப்பகுதி. இதனைக் கண்டுபிடித்த ருமேனியா நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் விக்டர் பேபஸ் மற்றும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நோய்க் குறியியல் வல்லுநர் ஆகியோரின் பெயர்களைக் குறிக்கின்றது.

Babesia : பெபீசியா உண்ணி : குதிரை, நாய், ஆடு, பன்றி போன்ற கால்நடைகளின் விசப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒருவகை உண்ணி பிளாஸ்மோடியம் போன்ற அமைப்பை உடைய உண்ணி விக்டர் பேபஸ் எனும் நுண்ணுயிரியலியல் வல்லுநர், இந்த உண்ணியைக் கண்டுபிடித்ததால் இதற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

babesiosis : பெபசியா நோய்; பெபசியா உண்ணிக் காய்ச்சல் : மலேரியாக் காய்ச்சலைப் போன்ற ஒருவகை முறைக் காய்ச்சல், இது பெபீசியா உண்ணிகளால் உண்டாகிறது.

Babinski's : பெபின்ஸ்கியின்; பெபின்ஸ்கி மறிவினை; இது ஒரு நோய்த்தடயம் : கால்பாதத் தசைகளைத் துண்டும்போது கால் பெருவிரல் உட்பக்கமாக மடங்கும், மற்ற விரல்கள் வெளிப்புறமாக விரியும். முட்டுத்தடத்தில் ஏற்படும் சிதைவால் இத்தடயம் தோன்றுகிறது. ஃபிரான்ஸ் நாட்டின் நரம்பியல் வல்லுநர் ஜோசப் பாபின்ஸ்கி இந்தத் தடயத்தை முதன் முதலில் கண்டறிந்தார்.

baby : குழந்தை மழலை.

baby incubator : குழந்தை அடைகாப்பி.

Bachelor : திருமணம் ஆகாத ஆண்; திருமணமிலா ஆண்.