பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bacterial

174

bacteriology


ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனித்தனி உயிரணுக்கள், கோளவடிவில், நீண்ட வடிவில் சுருள் வடிலில் அல்லது வளைவுகளாக அமைந்து இருக்கும். இவை சங்கிலித் தொடர்களாக அல்லது திரள்களாக இருக்கும். சில வகைக் கிருமிகள் பூசனவலை வடிவில் அமைந்து இருக்கும். இவை, பச்சையம் உட்பட பல நிறமிகளை உற்பத்தி செய்யக் கூடியவை. சில உயிர்மக் கருக்களாக அமைந்து உள்ளன. சில சுதந்திரமாக வாழ்கின்றன, வேறு சில அழுகிய கரிமப் பொருள்களில் வாழ்கின்றன. இன்னும் சில ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. இவற்றுள் சில வகை மனிதருக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் நோய் உண்டாக்குகின்றன.

bacterial; bacterian; bacteric : நுண்ணுயிரின் நுண்ணுயிரால்; நுண்ணுயிர் சார்ந்த; நுண்மங்களைச் சார்ந்த; நுண்ணுயிர் இதய உள்ளறை அழற்சி நோய் : இதயத்தின் உள்ளுறையையும் இதயத் தடுக்கிதழ்களையும் பாதிக்கின்ற நுண்ணுயிரி நோய். நுண்ணுயிரி உடல் திசுக்களை அல்லது அணுக்களை பாதிக்கும் போது உண்டாகின்ற எதிர்வினைப் பண்பால் அழற்சி ஏற்படுதல். நுண்ணுயிரின் விளைவால் உண்டாகும் நச்சுப் பொருள்.

நுண்ணுயிர் மூளையுறை அழற்சி நோய் : மூளையுறைகளைப் பாதித்து மூளைக் காய்ச்சல் நோயை ஏற்படுத்துகின்ற ஒரு வகை நுண்ணுயிரி நோய்.

bactericidal : நுண்ணுயிர்க் கொல்லல்; நோய் நுண்மக் கொல்லல்; நோய்க் கிருமிக் கொல்லல்; நுண்மங்களை அழிக்கிற.

bactericide : நுண்ணுயிர்க் கொல்லி; நோய் நுண்மக்கொல்லி; நோய்க் கிருமிக் கொல்லி; நுண்மக் கொல்லிகள் : நோய்க் கிருமிகளைக் கொன்று அழிக்கும் தன்மையுள்ள மருந்து (எ-டு) பெனிசிலின் மருந்து.

bacterid : நுண்ணுயிர்த்தோல் கொப்புளம் : நுண்ணுயிர்க்கிருமி அல்லது அதன் நச்சுப் பொருளால் தோலில் உண்டாகின்ற கொப்புளம்.

bacterio : நோய் நுண்மத்தைச் சார்ந்த.

bacterisid; bacteroid : ஒட்டுயிர் நுண்மம்.

bacterioclasis : நுண்ம உடைவு; நுண்மக் கழிவு.