பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bacteriotherapy

176

badge


bacteriotherapy : நுண்ம மருத்துவம்.

bacteriotoxemia : இரத்த நுண்ம நச்சேறல்.

bacteriotoxin : நுண்ம நச்சு.

bacterium : நுண்ம உயிரி; பாக்டீரியம் : மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒர் அணுவால் ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக்கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும்,நோய்களையும் உண்டாக்குகின்றன. எனினும், பெரும்பாலானவைபயனுடையவை சில பாக்டீரியாக்கள் மண்ணில் விழும் இறந்த உயிர்களை மட்கச் செய்து மண்ணோடு கலந்து விடச் செய்கின்றன. வேறு சில பாக்டீரியாக்கள் காற்றிலிருந்து நைட்ரஜனை நிலைப் படுத்தித் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றன. பாக்டீரியா பற்றி ஆராய்வது பாக்டீரியாவியல் எனப்படும்.

bacteriuria : சிறுநீர்க் கிருமி; நுண்ணுயிர் சிறுநீர் : சிறுநீரில் நோய்க்கிருமிகள் இருத்தல். ஒரு மில்லி லிட்டரில் 1,00,000-க்கு மேற்பட்ட நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருக்கும். இதனால், சிறுநீர் அடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படும்.

bacteriotoxaemia : குருதி நுண்ம நச்சேற்றம் : நுண்ணுயிரிகளின் நச்சுக்கள் இரத்தத்தில் கலந்துள்ள நிலை.

bacterium : நுண்ணுயிரி; நோய் நுண்மம் : ஒருவகை நோய்க் கிருமி, நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரி. உயிரணுப் பிறப்பால் இனப்பெருக்கம் செய்யும் நுண்ணுயிரி. கோள வடிவில், நீள் வடிவில் அல்லது சுருள் வடிவில் இருக்கும். கோள வடிவில் அமைந்துள்ள நுண்ணுயிரி நகரும் தன்மையற்றது. மற்றவை நகரும் தன்மை உள்ளவை.

bacterize : நுண்மப் பண்டுவம்.

bacteroid : தீங்கிலா நுண்ணுயிரி : நுண்ணுயிரியை ஒத்தவை.ஆனால், தீங்கற்றவை. வாய் மற்றும் பெருங்குடலில் வாழக்கூடியவை.

bacteroides : தீங்கிலா நுண்ணுயிரிகள்.

badge : அடையாளச் சின்னம்; அடையாளப் பொறி; அடையாளப் பட்டை; ஊடுகதிர் அடையாளப் பட்டை : ஊடுகதிர் படங்களை எடுப்பவரின் உடலில் புகுந்துள்ள ஊடுகதிர் அளவைக் கணிக்க உதவும் அடையாளப்பட்டை. இப்பட்டையை ஊடுகதிர் படம் எடுப்பவர் தன் சட்டையில் பொருத்திக் கொள்வார்.