பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

baffle

177

Baker's cyst


battle : ஒழுங்குத் தகடு; நீர்மத் தகடு :' ஒளிகருவியின் முகப்பில் இருக்கும் சிறுபொறி. இது காற்றில் கலந்து வரும் மாசுக்களைப் பிரித்து விடுகிறது. சுத்தமான காற்றை மட்டும் உறிஞ்ச இது உதவுகிறது.

baga : விழிக்கீழ்த்தோல் வீக்கம்; விழிக்கீழ்த்தோல் தொங்கல் : விழிகளின் கீழ்ப்பகுதியில் உள்ள தோல் அழற்சியுற்று, வீக்கமடைந்து, தொங்குதல். புகை பிடிப்பதாலும், தூக்கமின்மையாலும் அங்குள்ள இரத்த நாளங்கள் வீங்கி இவ்வாறு ஏற்படுகிறது.

bagasse : கரும்புச்சக்கை : கரும்பிலிருந்து உற்பத்தியாகும் கழிவுப்பொருள். கரும்புச்சாறு பிழிந்தெடுக்கப்பட்ட பின் உண்டாகின்ற நடுவகைக் கழிவு. பூஞ்சைக் கிருமிகள் உயிர் வாழ்வதற்கு உகந்த இடம்.

bagassosis : கரும்புச் சக்கையேற்ற நுரையீரல் அழற்சி; நுரையீரல் கரும்புச் சக்கை ஏற்றம் : இது ஒரு தொழில் சார்ந்த நுரையீரல் நோய். 'தெர்மோ ஆக்டினோமைசிஸ் சக்காரி' எனும் பூஞ்சைக் கிருமி சுவாசிக்கப்படும் காற்றின் வழியாக நுரையீரலை அடைந்து அழற்சியை ஏற்படுத்தும் நிலை. காய்ச்சல், மூச்சிளைப்பு, சோர்வு ஆகியவை இந்நோயின் சில அறிகுறிகள்.

bagging : சுவாசமேற்றம் :மூச்சுப்பை மூலம் செயற்கை முறையில், சுவாசமளிப்பது. இப்பையின் வாயை நோயாளியின் முகத்தில் குறிப்பாக வாய் மற்றும் முக்குப் பகுதியில் வைத்து, அதன் பை போன்ற பகுதியைக் கைவிரல்களால் அழுத்தினால், அப்பையிலுள்ள காற்று அந்த நோயாளி யின் நுரையீரலுக்குள் செல்லும்.

bairn : குழந்தை; குழவி.

Bainbridge's reflex : பெயின் பிரிட்ஜ் மறிவினை : இதயத்தில் தோன்றும் ஒருவகை அனிச்சை வினை. இதயத்தின் இடது மேலறையில் உள்ள விரி ஏற்பிகளைத் துண்டினால் இதயத் துடிப்பும், நாடித் துடிப்பும் அதிகரிக்கும் என்ற வினையை ஆங்கில உடலியங்கு இயல் வல்லுநர். பிரான்சிஸ் பெயின் பிரிட்ஜ் என்பவர் கண்டறிந்து கூறினார். ஆகவே, இவ்வினைக்கு அவர் பெயர் குட்டப்பட்டது.

bake : உயர் வெப்பத்தில் சுடுதல்.

baker-legged : முட்டிக்கால் உள்ள.

Baker's cyst : பேக்கர் நீர்க்கட்டி : முழங்கால் மூட்டழற்சி நோய் உள்ளவர்களுக்கு முழங்கால் மூட்டின் பின்புறம் நீரால்