பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

battered woman syn...

188

Bazin's disease


நீர்த்தேக்கத்தின்போது எடுக்கப்படும் ஊடுகதிர்ப் படத்தில் காணப்படுகின்ற ஒருவித நோய் நிலை; நுரையீரல்களில் இரு புறமும் வெளவால் இறக்கை விரித்தாற் போன்று நுரையீரல் திசுக்கள் அரிக்கப்பட்டிருக்கும்.

battered woman syndrome : பெண் உருக்குலைவு நோயியம்: கணவன் தன்னுடைய மனைவியைத் திரும்பத் திரும்ப அடித்துக் காயப்படுத்தி உருக்குலையுமாறு செய்தல். இதனால் மனைவிக்கு உடல் காயங்கள் மட்டுமின்றி உளவியல் பாதிப்புகளும் ஏற்படுவது உண்டு.

battarism : திக்கல்; திக்கல் பேச்சு.

battery : (1) மின்கலம்; மின்பொறி அடுக்கு : மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரு சிறு பொறி.

அடுக்குச் சோதனை : நோயாளியிடம் காணப்படும் ஒரு குறிப்பிட்ட நோயின் காரணத்தைக் கண்டு அறிவதற்காக அடுக்கடுக்காகச் செய்யப்படும் பரிசோதனை முறைகள்.

Battle's sign : பேட்டில் தடயம் : மண்டையோட்டின் பின்பக்க எலும்பு உடையும்போது எலும்புச் சவ்வுக்கு அடியில் இரத்தம் சேர்ந்து, உறைந்து, கட்டியாவது, இதனால் பொட்டு எலும்புக் கூம்புப்பகுதியில் தோலில் நிற மாற்றம் ஏற்படும். இந்தத் தடயத்தை இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் வில்லியம்பேட்டில் கண்டுபிடித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப் படுகிறது.

Battey bacillus : பேட்டி நுண்ணுயிரி : ஒருவகைக் காசநோய்க் கிருமி. பேட்டி எனும் ஊரில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இக்கிருமி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

Baudelocque's method : பாடிலாக் முறை : கருவிலிருக்கும் குழந்தையின் முடிப்பிறப்புத் தோற்றத்தை தலையுச்சிப் பிறப்புத் தோற்றமாக மாற்றி அமைக்கும் முறை. ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லீன்பாடிலாக் எனும் மகப்பேறு மருத்துவ வல்லுநர் இதனை முதன்முதலில் கண்டறிந்து கூறினார்.

Baypen : பேய்ப்பன் : மெஸ்லோசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Bazette's formula : பேசெட் சூத்திரம் : இதயமின்னலை வரைபடத்திலுள்ள QT இடை வெளியானது மின்பொறியுள்ள இதயச் சுருக்கத்தின் மொத்த அளவைக் குறிப்பதாகும். இதுவே 'பேசெட் சூத்திரம்' எனப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தால் இதன் அளவு குறையும்; இதயத்துடிப்பு குறைந்தால் இதன் அளவு அதிகரிக்கும்.

Bazin's disease : பாசின் நோய் : பெண்களின் கால்களின் தோலில்