பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Becker's muscular dy...

190

bedpan


அல்லது வரிகள். இது ஒரு மண்டல நோயின் தடயம். ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடலியங்கு வல்லுநர் ஜோசப் பியூ என்பவர் கண்டறிந்த தடயம்.

Becker's muscular dystrophy : பெக்கரின் தசை வளப்பக்கேடு : குழந்தைகளிடம் காணப்படும் ஒரு பரம்பரை நோய். தசைகளுக்குத் தவறான ஊட்டச்சத்து செல்வதால் தசைகள் சூம்பிப்போவதுடன் வயதாக ஆக நோய்த்தாக்கம் சிறிது சிறிதாக அதிகரிக்கும்.

Beck's triad : பெக்கின் மும்மை : இதயத்தில் காணப்படும் மூன்று வகை நோய்க்குறித் தொகுதி. மிகுசிரைநாள அழுத்தம், தமனி நாளக் குறை அழுத்தம் மற்றும் சிற்றிதயமும் மூன்று அறிகுறிகள் அடங்கிய ஒரு நோய்க்குறித் தொகுதி, அமெரிக்க உடலியங்கு இயல் மருத்துவர் கிளாட்பெக் என்பவர் இதனை விவரித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப் படுகிறது.

beclamide : வலிப்புத் தடுப்பு மருந்து : காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் வலிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்து.

becomethasone : பெக்ளோமெத்தாசோன் : மூளை நோய்க்காக உள்ளிழுப்பதற்காகத் தயாரிக்கப்படும் மருந்து.

beclonmethasone dipropionate : பெக்லோமீதசோன் டிப்ரோபியோனேட் : ஆஸ்துமா நோய்க்குத் தரப்படும் ஒருவகை இயக்குநீர் மருந்து. உள் இழுப்பான்களில் இம்மருந்து பயன்படுத்தப்படும்.

Becosym : பெக்கோசிம் : வைட்டமின்-B குறைபாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரை. இதில் நரம்பூட்டச்சத்து (அனூரின்), ரிபோபிளேவின், நிக்கோட்டினாமைடு, பைரிடாக்சின் ஆகியவை அடங்கியுள்ளன.

becotide : பெக்கோட்டைடு : பெக்ளோமெத்தாசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

bed : படுக்கை; கட்டில்; உடல் தாங்கி; உறுப்புத்தாங்கி; திசுத்தாங்கி :

bed bath : ஒற்றிக் குழிப்பு .

bedbug : மூட்டைப்பூச்சி; மூட்டுப் பூச்சி : இரத்தம் உறிஞ்சும் பூச்சி. மிதவெப்ப மண்டலங்களில் இது பெருமளவில் வாழ்கிறது.

bed occupancy : படுக்கை நோயாளி; உள் நோயாளி : நாள் முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை மேற்கொள்ளுதல்.

bedpan : படுக்கை மலத்தட்டு; நோயாளி கழிகலன் : படுக்கையி லிருந்து எழுந்து நடக்க இயலாத நோயாளியின் மலத்தையும், சிறு நீரையும் பெறுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு பாத்திரம். இது உலோகத்தாலும், பிளாஸ்டிக்