பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bifid

198

biliary


தொரு வட்டில். இதில், கருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதி மூழ்கியிருக்கு மாறும் அதே சமயம் கால்கள் வெளியிலும், பாதங்கள் தரையிலும் இருக்குமாறும், அமரலாம். யோனிக் குழாயை அல்லது குதவாயைத்துப்பரவு செய்வதற்கான இணைப்புறுப்புகளும் உண்டு.

bifid : இரு பிளவு; பிளவு biliary: வெடிப்பாக அல்லது கவர்முள் வடிவாக இரு பகுதிகளாக பிளவுபட்டிருத்தல்.

bifocal : இருபார்வைக் கண்ணாடி; இரட்டைப்பார்வைக் கண்ணாடி; இரு குவியம் : இருவெவ்வேறு குவியாற்றலை பெற்று உள்ள ஒரு கண்ணாடி.

bifurcation : பிளவீடு; இரண்டாய் பிரித்தல் : இரு கிளைகளாகப் பிரித்தல்.

biguanides : பைகுவானைடஸ் : வாய்வழி உட்கொள்ளப்படும் நீரிழிவு மருந்து. இது நீரிழிவு நோயாளிகளின் தசைத் திசுக்கள் அதிகச் சர்க்கரையை (குளுக்கோஸ்) ஈர்த்துக் கொள்ளும்படி செய்கிறது. இதனால், பாலில் அளவுக்கு அதிகமாகக் காடிப் பொருள் சேரும் பக்கவிளைவு ஏற்படுகிறது.

bilateral : இருபுறமும் : இருபக்க; இரண்டு பக்கங்கள் கொண்ட, இருபுறமும் தெரிகின்ற.

bilateral symmetry : இருபக்கச்சீர்மை.

bilayer : ஈரடுக்கு : இரண்டு அடுக்குகளைக் கொண்டு இருக்கிறது.

bile : பித்தநீர் : பித்தம் நுரையீரலில் சுரந்து, பித்தப் பையில் சேர்த்து வைக்கப்படும் கசப்பான, காரத்தன்மையுள்ள ஒட்டும் இயல்புடைய, பசும் மஞ்சள் நிறமான திரவம். இதில் நீர், மியூசின், லெசித்தின், கொலஸ் டிரால், பித்த உப்புகள், பிலிரூபின், பிலிவெர்டின் என்ற நிறமிகள் அடங்கியுள்ளன.

bile ducts : பித்த நாளம்; பித்த நீர்க் குழாய்.

bile pigment : பித்த வண்ணம்.

Bilharzia : பில்ஹார்சியா : ஒரு வகை ஒட்டுண்ணிப் புழு. இரத்தத்தில் காணப்படுவது. (எ-டு) சிஸ்டோ சோமா. ஜெர்மனி நாட்டின் மருத்துவர் தியோடர் பில்ஹார்ஷ் இதனைக் கண்டுபிடித்தார்.

bilharziasis : ஒட்டுயிர்ப் புழு நோய் : இரத்தத்திலுள்ள தட்டை வடிவ ஒட்டுயிர் புழு வகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை.

biliary ; பித்தநீர் சார்ந்த : பித்த நீர் தொடர்புடைய நோய்கள். பித்த வயிற்று வலியினால், அடி