பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

blood count

211

blood letting


blood count : குருதியணு எண்ணிக்கை : குருதியணு அளவை மானியைப் பயன்படுத்தி, இரத்தத்தில் ஒரு மில்லி மீட்டரில் எத்தனை சிவப்பணுக்கள் அல்லது வெள்ளை அணுக்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுதல். இதன் மூலம், இரத்தத்தில் சிவப்பு வெள்ளை அணுக்களின் வீத அளவு கணக்கிடப் படுகிறது. பாலிமார்ஃபஸ்: 65%-70%; லிம்ப்போசைட்ஸ்: 20%-25% மானோசைட்ஸ்: 5%; ஈசினோஃபில் :0%-3%; பாசோஃபில்ஸ்-0%- 0.5% குழந்தைப் பருவத்தில் லிம்போசைட்டுகளின் வீத அளவு அதிகமாக இருக்கும்.

blood-dust : குருதியிலுள்ள நிறமிலா சிறு துகள்.

blooded : குருதியுடைய.

blood glucose profiles : குருதி சர்க்கரை அளவு : நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் வீத அளவைக் கண்டறிதல். இது நீரிழிவு நோயாளிகளுக்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உதவுகிறது. நீரிழிவு நோயாளியின் இரத்த மாதிரிகள் காலை உணவுக்கு முன்பும், காலை உணவுக்கு 2 மணி நேரம் பின்பும், நண்பகல் உணவுக்கு 2 மணி நேரம் பின்பும், மாலை உணவுக்கு முன்பும், இரவு படுக்கைக்குப் போகும் நேரத்திலும் சில நோயாளிகளுக்கு இரவு நேரத்திலும் எடுக்கப்பட்டுச் சர்க்கரை அளவு கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் நோயாளிக்குரிய மருத்துவ முறை தீர்மானிக்கப்படுகிறது.

blood group : குருதி பகுப்பினம்; குருதி வகை; குருதி வகையறிதல் : குருதியின் நால் வகைப் பகுப்பினங்கள். இவை A, B, AB, O என்னும் இனங்களாகும். இந்தப் பகுப்பினங்களில், '0' இனம் தவிர மற்ற மூன்று இனங்களின் உயிரணுக்களில் நேரிணையான காப்பு மூலங்களைக் (ஆன்டிஜன்) கொண்டிருக்கின்றன. '0' இனத்தின் உயிரணுக்களில், 'A' காப்பு மூலமோ, 'B' காப்பு மூலமோ அடங்கியிருக்கவில்லை. இதனா லேயே, 'O' இரத்தத்தை உடையவர்களுக்குச் செலுத்தலாம். இதனால் 'O' இனம், பொது இனம் எனப்படுகிறது. ஒருவர் எந்த இன இரத்தத்தைக் கொண்டிருக்கிறாரோ அந்த இன இரத்தம் மட்டுமே அவருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.

blood-heat : குருதி வெப்பளவு.

bloodless : குருதியற்ற.

blood letting : குருதி வடித்தல்; குருதி விடுப்பு : மருத்துவ முறைப்படி குருதியை வடித்தல்.