பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bolus

214

bone-marrous Cancer


பிளவை போலன்றி, இதில் சீழ் வடிவதற்கு ஒரு வாய் இருக்கும்.

bolus : கவளம் : உணவுக்கவளம் விழுங்குவதற்கு எளிதாக உள்ள வகையில் உருண்டை வடிவில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்துப் பொருள். உடலில் மருந்தானது துரிதமாகச் செயல்படுவதற்காக, சிரை நாளம் வழியாக மிக வேகமாக மருந்தைச் செலுத்தும் முறை.

Boividon : போல்விடான் : மியான்ஸ்கிரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

bonding : பிணைப்பு : ஒருவர் மற்றொருவருடன் கொள்ளும் உணர்வுபூர்வமான பிணைப்பு. இது நீண்டகால உணர்ச்சி மயமான உறவுநிலைக்கு இன்றியமையாதது. பிறந்த குழந்தைகள், தீவிர மருத்துவப் பிரிவில் கவனிக்கப்பட வேண்டிய பிரிவில் கவனிக்கப்பட வேண்டிய சம யத்தில் குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும், முக்கியமாகத் தாய்க்குமிடையே இந்தப்பிணைப்பு உயிரியல் முறையில் இன்றியமையாதது. பிறந்த குழந்தைக்கும் அவற்றின் பெற்றோருக்கும் இடையே அன்பு இணைப்பை வளர்ப்பதற்குத் தனி முயற்சிகள் தேவை.

bone : எலும்பு : ஒருவகை இணைப்புத் திசு கால்சியம் கார்போனேட்,கால்சியம்பாஸ்ஃபேட போன்ற உப்புப்பொருள்கள் இதில் படிந்து இதனைக் கடினமாக்கி அடர்த்தியாக்குகிறது. தனித்தனி எலும்புகள் சேர்ந்து எலும்புக்கூடாக அமைகின்றன.

bone graft : எலும்பு ஒட்டு மருத்துவம் : உடம்பின் ஒரு பகுதி யிலிருந்து ஒர் எலும்புத்துண்டை எடுத்து இன்னொரு பகுதியில் பொருத்துதல் அல்லது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றிப் பொருத்துதல். எலும்புக் கோளாறுகளைச் சீர்படுத்துவதற்கு அல்லது எலும்பு உருவாக்கத் திசுக்களை அளிப்பதற்கு இந்த மருத்துவம் பயன்படுகிறது.

bone marrow : எலும்பு மச்சை; எலும்புச் சோறு; எலும்பு நாளக் கூழ் : எலும்பு உட்புழையிலுள்ள சோறு போன்ற பொருள். பிறக்கும்போது இந்த உட்புழையினுள், சிவப்புச் சோறு போல் அமைந்த, இரத்தம் நிறைந்தி ருக்கும். பின்னர், நீண்ட எலும்புகளினுள் கொழுப்புப் பொருள் படிந்து சிவப்புச்சோறு, மஞ்சள் எலும்புச்சோறாக மாறுகிறது.

bone-marrous cancer (multiple myeloma) : எலும்பு மச்சைப்புற்று : எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில்