பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

booster

216

Bornholm disease


கள் அழற்சியுற்று முற்றிலுமாக அழிந்து போவதால் ஏற்படுகின்ற நுரையீரல் அழற்சி நோயைக் குறிப்பது.

booster : செயலூக்கி; ஊக்குவிப்பு ஊசி : ஒருவருக்கு ஏற்கனவே தரப்பட்ட தடுப்பு ஊசியின் செயலை ஊக்குவிப்பதற்காகப் போடப்படும் மற்றொரு தடுப்பூசி. (எ-டு) குழந்தைகளுக்கு 1 1/2, 2 1/2, 3 1/2 மாதங்களில் முத்தடுப்பூசி போடப்படும். இதன் ஊக்குவிப்பு ஊசிகள் முறையே ஒன்றரை, நான்கரை வயதுகளில் போடப்படும்.

borax : வெண்காரம் : போரிக் அமிலம் போன்றதொரு மென்மையான நோய்க்கிருமித் தடைப் பொருள். போரக்ஸ் கிளிசரைனும் எலும்பு நிரம்பிய போரக் கம் தொண்டைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும் இதனை அரிதாகவே பயன்படுத்துதல் வேண்டும்.

borborygmi : வயிற்றுப் பொருமல் : குடலில் வாயுக்கள் அசைவதால் உண்டாகும் குமுறல் சத்தம்.

borderline : எல்லைக்கோடு; இடைப்பட்ட விளிம்பு; எல்லை; நிலையற்ற : எந்த நிலையிலும் உறுதியில்லாத இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட. மிகு இரத்த அழுத்த எல்லை : இயல்பான இரத்த அழுத்தத்திற்கும் மிகு இரத்த அழுத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் ஒருவரின் இரத்த அழுத்த அளவு இருப்பது.

நிலையற்றத் தொழுநோய் : இவ்வகைத் தொழுநோயின் தோல் படைகள் பார்ப்பதற்கு டியூபர் குலாய்டு வகையைப் போலவே இருக்கும். நாள்கள் ஆக ஆக இப்படைகள் லெப்ரோமேட்டஸ் வகைக்கு மாறிவிடும்.

இடைப்பட்ட கட்டி : புற்றுநோய்க் கட்டியாக மாறும் தன்மையுள்ள கட்டி.

bordeteila : கக்குவான் கிருமி : கக்குவான் இருமல் நோய் உண் டாக்கும் 'புருசெல்லான்சியே’ என்ற நோய்க்கிருமி (பாக்டீரியா).

bonedom : அலுப்பு.

boric acid : போரிக் அமிலம் : மென்மையான நோய்க் கிருமித் தடைப்பொருள். கண் சொட்டு மருந்தாகவும், காதுச்சொட்டு மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் துளையும் கரைசலையும் உடலின் வெற்றுப் பகுதி யில் தடவுதலாகாது. அதனால், போரிக் நச்சு உண்டாகலாம்.

Bornholm disease : பார்ன்ஹால்ம் நோய் : டென்மார்க்கைச் சேர்ந்த பார்ன்ஹால்ம் என்ற தீவில் அதிகம் பரவியிருந்த இந்த நோயை சில்வெஸ்டரின் 1934 இல் கண்டறிந்து விளக்கினார். ஒருவகை நோய்க்