பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bougie

218

Boyle's apparatus


bougie : வளைவுக் கத்தி; புகுத்தி : வளையும் இயல்புடைய மென் மையான அறுவைக் கத்தி. இது நீள் உருளை வடிவுடையது. இது பிசின் நெகிழ்வு உலோகத் தினாலானது. இறுக்கங்களை விரிவடையச் செய்வதற்கு இது பயன்படுகிறது.

bounding pulse : எழும்பு நாடி.

Bourneville's disease : பார்ன் வில்லி நோய் : நரம்புத் தோல் தடிப்பு நோய். இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயுள்ளோருக்கு வலிப்பு நோய், மனநோய், மூளையில் கட்டி, தோலில் தடிப்புகள் மற்றும் கட்டிகள் காணப்படும். இந் நோய்க்கு முறையாக சிகிச்சை இதுவரைக் கடைபிடிக்கப்பட வில்லை. ஃபிரான்ஸ் நாட்டின் நர்ம்பியல் வல்லுநர் டெய்சரி மேக்லோயர் பார்ன்வில்லி என்பவர் இந்த நோயைக் கண்டுபிடித்தார்.

boutonniere deformity : பௌட்டனியர் ஊனம் : முதுமை மூட்டழற்சி நோயின்போது கை, கால்விரல் அசைவுகளில் உண்டாகும் ஊனம்.

bovine : கால்நடை சார்ந்த; மாட்டினம் : பசு மாடு, எருது போன்ற கால்நடை சார்ந்த.

bowel : குடல்; சிறுகுடல்; பெருங்குடல்; குடல் அசைவு; குடல் இயக்கம் : உணவு செரிப்பதற்காகவும், மலம் வெளியேற்றுவதற்காகவும், குடல் இயங்குதல், அசைதல்.

குடல் ஒலிகள் : குடல் இயங்கும் போது உண்டாகும் ஒலிகள். இந்த ஒலிகளைக் கேட்டு சில நோய்களை மருத்துவர்கள் கணிப்பர்.

bow legs : கால் வளைவு; பக்க வளைவுக்கால் : முழங்காலுக்குக் கீழே உள்ள கால் பக்கவாட்டில் வளைந்திருத்தல் முழுங்காலுக்குக் கீழே உள்ள பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பது.

Bowman's capsule : பௌமண் கிண்ணம் : சிறுநீரக வடிப்பியில் காணப்படும் கிண்ணம் போன்ற அமைப்பு. சிறுநீரக வடி முடிச்சுகளை உள்ளடக்கி உள்ளது. ஆங்கில உடலியங்கு இயலாளர் சர் வில்லியம் பெளமண் இதைக் கண்டறிந்தார்.

Bowman's membrane : பெளமண் ஆய்வு : கரு விழிப்படலத்தையும் கருவிழிப் பொருளையும் பிரிக்கின்ற மெல்லிய சவ்வு அல்லது இழை.

Boyle's anaeasthetic machine : பாயில் மயக்கமருந்து எந்திரம் : குளோரோஃபார்ம், ஈதர், நைட்ரஸ் ஆக்சைடு வாயு, ஆக்சிஜன் போன்ற மயக்க மருந்துகள் கொடுப்பதற்கான எந்திரம்.

Boyle's apparatus : பாயிலின் கருவி; பாயிலின் உணர்வகற்றிக் கருவி : இங்கிலாந்து நாட்டில்