பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

breast cancer

222

bridge


breast cancer : முலைப் புற்று; முலைப் புற்றுநோய்; மார்பகப் புற்றுநோய்.

breast-girdle : மார்பு எலும்பு வளையம்.

breath : மூச்சு; மூச்சோட்டம்; உயிர்ப்பு.

breathing : மூச்சியக்கம்.

breath H2 (hydrogen) test : ஹைட்ரஜன் சோதனை : சர்க்கரைக் குறைபாட்டினைக் கண்டு அறிவதற்கான ஒரு மறைமுகமான முறை.

breech : பிட்டம் : உடலின் கீழ்புறப் பின் பகுதி.

breech birth presentation : பிட்டப் பிறப்பு நிலை : கருப்பையில் இருந்து குழந்தை பிறப்பதற்கு இயல்பாக அதன் தலை முன்னோக்கி அமைந்திருக்க வேண்டும். சில சமயம், கருப்பையில் குழந்தையின் பிட்டப் பகுதி முன்னோக்கி அமைந்திருக்கும். இதனை 'பிட்டப் பிறப்பு நிலை' என்பர்.

breech : பிட்டம்; குண்டி : பிரசவத்தின்போது குழந்தையின் தலை முதலில் வெளிவருவதற்குப் பதிலாக பாதம், கால் அல்லது பிட்டம் முதலில் வெளிவருதல். இதனைப் 'பிட்டப் பிறப்பு நிலை' என்பர். பிரசவத்திற்கு சில காலம் முன்பு கருப்பையில் இயல்பாக குழந்தையின் தலை முன்னோக்கி அமைந்திருக்கும். சில சமயம், குழந்தையின் பிட்டம் முன்னோக்கி அமைந்திருக்கும்.

bregma : முன்னிணைவிலா எலும்பு முன் உச்சி; முன் உச்சி : மண்டை ஒட்டின் முன்னிணை விலாப் பகுதி விலா எலும்பு.

Brenner's tumour : பிரன்னர் கட்டி : கருப்பையில் வளரும் தீங்கற்ற கட்டிவகை. ஜெர்மன் நோய்க் குறியியல் வல்லுநர் பிரிட்டிஷ் பிரன்னர் கண்டுபிடித்த கட்டி.

Brevidil : பிரவிடில் : சுக்சாமெத் தோனியம் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

Bricanyl : பிரிக்கானில் : டெர்புட்டாலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

bridge : பாலம்; குறுகிய திசுக்கற்றை :இரண்டு பற்களுக் கிடையிலுள்ள வெற்றிடத்தை அடைக்கப் பயன்படும் ஒரு வகைப் பல்லிடைக் கருவி. பல் விழுந்த இடத்தில் பொருத்தப் படும் சிறு பொருள். மூக்கெலும்புப் பாலம், மூக்கின் மேற்பகுதி இரண்டு மூக்கெலும்பு இணைப்பால் அமைந்துள்ள விதம்.