பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Brodie's abscess

224

Brompton mixture


மத்திய மடல் அடைத்துக் கொள்ளல்.

Brodie's abscess : புருடீ சீழ்க்கட்டி : நாட்பட்ட எலும்பு மச்சை அழற்சி நோயின்போது எலும்பில் சீழ்க்கட்டுதல். சர் பெஞ்சமின் புருடீ எனும் அறுவைச் சிகிச்சையாளர் இதனை இனம் கண்டறிந்தார்.

Brodmann's areas : புருட்மேன் பகுதி : மூளையின் பெரு மூளைப் பகுதி 47 பகுதிகளாகப் பிரிக்கப் படுதல். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உடலியல் மருத்துவர் 'கார்பினியன் புருட்மேன்' என்பவர் மூளையின் நரம்பு செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இவ்வாறு பல்வேறு பகுதிகளாகப் பிரித்துள்ளார்.

broiling : அனல் வாட்டல்.

bromhexine : புரோம்ஹெக்சின் : சளியை இளக்கும் மருந்து. இது வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. இது இருமலுக்கு முன்பு சளியை இளக்குகிறது. ஈளை நோய் (ஆஸ்துமா) உடையவர்களுக்கு நரம்பு வழியாகச் செலுத்தும் மருந்தாகவும் கிடைக்கிறது.

bromhidrosis : நாற்ற வியர்வை; அழுகல் நாற்ற வியர்வை : தோலில் அமைந்துள்ள நுண்ணுயிரிகளின் அழுகல் சிதைவால் வியர்வை நாற்றமெடுத்தல்.

bromism : புரோமை நச்சு : சோரிகை எனப்படும் புரோமைடுகளைத் தொடர்ந்து அல்லது அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் உண்டாகும் கடுமையான நச்சுத்தன்மை.

bromocriptin : புரோமோகிரிப்டின் : புரோலேக்டின் மிகு இரத்தம், பார்க்கின்சன் நோய் (அசையா நடுக்கம்) ஆகியவற்றுக்குத் தரப்படும் டோபமின் ஏற்பித் தூண்டல் மருந்து.

bromosulphthalein test : புரோமோசல்ஃப்தாலைன் சோதனை : நுரையீரல் செயற்படுவதைக் கணித்தறிவதற்காகப் பயன்படும் சோதனை. உடல் எடையின் ஒரு கிலோ கிராமுக்கு 5 மில்லி கிராம் என்ற வீதத்தில் நீலச் சாயம் ஊசி மூலம் நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்பட்ட 45 நிமிடத்திற்குப் பின்னரும் இரத்தத்தில் 5%-க்கு மேல் சாயம் சுற்றோட்டத்தில் இருக்குமானால் அப்போது கல்லீரலின் செயற்பாடு பழுதுபட்டிருக்கிறது என்று அறியப்படுகிறது.

Brompton mixture : புரோம்ப்டன் கலவை : ஆல்கஹால், அபினி (மார்ஃபின்), கோக்கைன் அடங்கிய ஒரு மருந்துக் கலவை. கடைக்கணு மூட்டு வலிவைக் குறைக்க இது பயன்படுகிறது.