பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bronchotomy

229

Budd-Chiari synd...


bronchotomy : தொண்டை துளைப்பு; மூச்சுக் குழல் துளைப்பு; மூச்சுப் பெருங்குழலில் துளைஇடுதல் : தொண்டையைத் துளைத்து மூச்சுப் பெருங்குழலில் துளையிடுதல்.

bronchovesicular : மூச்சுக் காற்றறை சார்ந்த : மூச்சுக் காற்றறை களில் சுவாசித்தல் ஒலி.

brow : புருவம்; நெற்றி; தலைப் புருவம்; முகப்புருவம் : கண்குழிக்கு மேலேயுள்ள பகுதி.

brow ague : ஒற்றைத் தலை மண்டையிடி.

Broxil : பிராக்சில் : ஃபெனத்திசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Brudzinski's sign : உறுப்பு வளைவு : தலையணையிலிருந்து தலையைத் தூக்கும்போது முழங்கால் மூட்டுகளும், இடுப்பும் மூளைவெளியுறை அழற்சியில் ஏற்படுவது போன்று வளைதல்.

bruise : கன்றிய காயம்; நசுக்கு; கீறல் : கன்றிப் போன காயம்; இரத்தம் கட்டிய நோவிடம்.

Burnner's glands : புருனர் சுரப்பிகள் : முன் சிறுகுடலின் முதல் பகுதியிலுள்ள சீதப் படலத்தின் அடியில் காணப்படும் காரச் சுரப்பிகள். அமிலத்தின் தூண்டுதலால் காரத்தன்மை உள்ள சுரப்புநீரைச் சுரக்கின்றன. சுவிட்சர்லாந்து உடலியல் வல்லுநர் ஜோகன் புருனர் இதனைக் கண்டுபிடித்தார்.

bruxism : பல் அமைப்பு; பல் கடித்தல் : பற்களை இயல்புகளை மீறுதலாகக் கடித்து அரைத்தல். இதனால், பல் தேய்ந்து வலுவிழந்து விடுகிறது.

bubo : அரையாப்பு; அக்குக்கட்டு; நிணநீர்க்கட்டியற்சி; நெறிக்கட்டு; நிணசீழ்க்கட்டியழற்சி : நிணநீர்ச் சுரப்பிகள் விரிவடைவதால், அக்குளிலோ, தொடை மடிப்பிடத்திலோ ஏற்படும் வீக்கம்.

bubonic : நெறிக்கட்டு சார்ந்த; அக்குள் கட்டு அல்லது அரையாப்பு சார்ந்த.

bubonocele : இடுப்பு வாதநோய்; தொடைப் பிதுக்கம் : வயிறும் இடுப்பும் சேருமிடத்தில் அண்ட வாதம் ஏற்படுதல்.

buccal : கன்னம் சார்ந்த; வாய்க் குரிய; வாய்சார்ந்த : கன்னம் அல்லது வாய்சார்ந்த.

buccal cavity : கன்னப் பொந்து.

buccinator : கன்னத்தசை : கன்னத்தில் காணப்படும் முக்கிய தசை.

Budd-Chiari syndrome : பட்சியாரி நோயியம் : கல்லீரல் சிரை அடைப்பு காரணமாக சிரை இரத்தம் கல்லீரலிலிருந்து வெளியேற இயலாத நிலைமை. ஆஸ்ட்ரியா நாட்டைச் சார்ந்த நோய்க்குறியியல் மருத்துவர்கள் ஜார்ஜ் பட் மற்றும் ஹென்ஸ்