பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

budding

230

bulla


சியாரி என்பவர்கள் இதனைக் கண்டுபிடித்தனர்.

budding : மொட்டு விடுதல்.

budesonide : புட்சோனைடு : ஆஸ்துமா நோயாளிகள் பயன் படுத்தும் இயக்க ஊக்கி மருந்து.

Buerger's disease : குருதி உறைவு நோய் : வெளிநாளங்களில் நோய் ஏற்படுவதால் உண்டாகும் குருதியுறைவு நோய். இதனால் அடிக்கடி நொண்டுதல் உண்டாகிறது.

buffer : சமநிலைப்படுத்திகள்; செறிவு மாறா; விளைவெதிர்; தாங்கி : ஹைட்ரஜனையும் ஹைட்ராக்சில் அயனிகளையும் பிணைக்கும் திறனுள்ள ஒரு கலவைப் பொருட் கரைசல், அமிலங்களை அல்லது காரங்களைச் சேர்க்கும் போது நிலை மாற்றத்தை எதிர்க்கும் தன்மை யுடையது.

bulbar : தொண்டை முடக்குவாதம் : மூளையின் பின் கூறாகிய முகுளத்தில் ஏற்படும் முடக்கு வாதம் அல்லது உதடு- நாக்கு தொண்டைப்பகுதி வாதம். இது முகுளத்திலுள்ள இயக்கு உட்கரு சிதைவுறுவதால் உண்டாகிறது. இந்நோயினால் இயல்பான காப்பு நரம்பியக்கங்களை நோயாளி இழந்துவிடுகிறார். மூச்சடைப்பு, சுவாசச் சீதசன்னி போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டாகிறது. மிகவும் ஊனமுற்ற குழந்தைகள் உணவு உண்ண மிகவும் சிரமப்படுவார்கள்.

bulbar paralysis : முருள வாதம்.

bulbitis: புணர்புழை மொட்டழற்சி : பெண்ணின் சிறுநீர்ப் புறத் துளைக்கு அருகில் அழற்சி ஏற்படுதல்.

bulbourethral : துணர் சுரப்பிகள் : இரண்டு துணர் சுரப்பிகள். இந்தச் சுரப்பிகள், ஆணின் சிறுநீர்ப் புறவழியின் குமிழுக்குள் திறப்புடையதாக இருக்கும். இவற்றின் கரப்புநீர், விந்து நீரின் ஒரு பகுதியாக அமைந் திருக்கும்.

bulge : புடைப்பு வீக்கம்.

bulginess : புடைத்த நிலை.

bulgy : வீங்கிய; புடைத்த.

bulimia : தீராப்பசி நோய் (ஆனைப் பசி); பெரும்பசி; பசி நோய் : குறுகிய காலத்தில் பெருமளவு உணவைக் கட்டுப்பாடின்றி உண்ண வேண்டும் என்ற பேரூண் வேட்கை.

bulk : சக்கை உணவு : நார்ச்சத்துணவு.

bulla : நீர்க் கொப்புளம்; பெருங் கொப்புளம்; வலியக் குமிழ் : பெரிய நீர்க் கொப்புளம். சரும இயலில் தோலில் உண்டாகும் நீர்க்கோப்பு நோய் வகைகளை