பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

burinex

232

bursities


எடுப்பதற்குப் பயன்படும் சிறு குழல். இது கண்ணாடியால் ஆனது. இதன் ஒரு முனையில் ரப்பரால் ஆன முடி இருக்கும்.

burinex : பூரினெக்ஸ் : பூமெட்டானைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

burkitts lymphoma : பர்கிட் நிணநீர்ச் சுரப்பி நோய் : தாடையில் அடிக்கடி ஏற்படும் உக்கிரமான நிணநீர்ச்சுரப்பி நோய். மற்றப் பகுதிகளிலும் உண்டாகும். முக்கியமாகக் குழந்தைகளைப் பாதிக்கிறது. மலேரியா நோய் கொள்ளை நோயாகப் பரவும் ஆஃப்ரிக்கப் பகுதியிலும் நியூகினியிலும் தென்படும் புற்று நோய் வகை

burn : வெந்தபுண்; தீக்கொப்புளம்; தீப்புண்; சுடு புண்; எரிகாயம் : வேதியல் பொருள்கள், கடும் வெப்பம், மின் பிழம்பு, உராய்வு, கதிர் வீச்சு காரணமாக தோலில் உண்டாகும் நைவுப் புண். எரிந்துள்ள தோலின் ஆழத்தைப் பொறுத்து, இந்தப் புண் முழுமையானது அல்லது பகுதியானது என வகைப்படுத் தப்படுகிறது. புண் ஆழமாக இருந்தால், தோல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதைக் குணப்படுத்துவதில் அதிர்ச்சியைத் தடுப்பதும், ஊட்டச்சத்துக் குறைவும் முக்கியமானதாகும்.

burntout syndrome : மனவெதும்பல் : மற்றவர்களின் சிக்கல்களினால் ஒருவர் மனம் வெதும்பித் தனது சக்தியை இழந்துவிடும் நிலை. இத்தகையவர்கள், ஒரு குழுமத்தின் உறுப்பினராகச் செயலற்றுப் போய் ஒதுங்கி விடுகிறார்கள்.

bursa : மசகு நீர்ச்சுரப்பி; குழிப்பை இழைமப் பை; பசை நீர்ப்பை : உராய்வைத் தடுப்பதற்குரிய பசை நீர் சுரக்கும் பை போன்ற அமைப்பு. மசகு நீர்ச்சுரப்பிகள், தசை நானுக்கும் எலும்புக்கு மிடையிலும், தசைக்கும் தசைக்கு மிடையிலும் காணப்படும் இந்தப் பரப்புகளிடையே உராய்வு ஏற்படாமல் அசைவுகள் இயங்குவதற்கு உதவுவது இதன் பணியாகும்.

மசகு நீர்ச் சுரப்பி

bursities : பசை நீர்ச்சுரப்பி வீக்கம்; குழிப்பை அழற்சி : மசகு நீர்ச்சுரப்பி பையில் ஏற்படும் வீக்கம்.