பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

butterfly pattern

234

byssinosis


வழி ஊசி மருந்துகள் மற்றும் சிரைவழி நீர்மங்களைச் செலுத்த இது பயன்படுகிறது. இதன் ஊசி முனையை சிரை நாளத்தில் புகுத்தி பிளாஸ்டிக் பகுதியை வெளித்தோலில் ஒட்டுத்துணி கொண்டு ஒட்டி விடுவார்கள்.

butterfly pattern : வண்ணத்துப் பூச்சி வடிவம் : நுரையீரல் மூச்சு நுண்ணறை அழற்சி நோயுள்ள நோயாளிக்கு எடுக்கப்படும் மார்பு ஊடுகதிர் படத்தில் நோய்த் தடயமானது வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் காணப்படும்.

butterfly rash : வண்ணத்துப் பூச்சித் தடிப்பு; பூச்சித் தடிப்பு : முகத்தில் காணப்படும் செந்தடிப்பு. மூக்கின் மேற்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் ஏற்படும் சிவப்பு நிறத்தடிப்பு.

buttock : பிட்டம்; குண்டி மேடு : உடலின் பின்புறத்தில் இடுப்பிற்குக் கீழ்க் புடைப்பாகவுள்ள பகுதி.

button : பொத்தான்; குமிழ்மாட்டி; குமிழ்க் கொளுவி : சட்டை மாட்டுவதற்கான குமிழ்.

பொத்தான் துளை : குறுகிய துளை, சிறு கீரல் போன்ற தோற்ற முடைய துளை.

பொத்தான் சுறுக்கம்; குமிழ் சுறுக்கம் : இதயத்திலுள்ள ஈரிதழ்த் தடுக்கிதழ் சுறுக்கம் இவ்வாறு காணப்படும்.

button-scurvy : தோல்சார் கொள்ளை நோய் : வெப்பமண்டலத்துக் குரிய தோல் சார்ந்த தொற்றும் தன்மை கொண்ட கொள்ளை நோய் வகை

butylamino benzoate : பியூட்டைல் அமினோ பென்சோயேட் : உறுப் பெல்லை உணர்வு நீக்கியாகப் பயன்படுத்தப்படும் ஒரு களிம்பு மருந்து.

butyn : பூட்டின் : பூட்டாக்கைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Butyrophenones : பூட்டிரோபீனோன்கள் : மனநோய்க்குத் தரப்படும் மருந்து வகை. டோபமின் எதிர்ப்பு மருந்து. (எ-டு) ஹலோபெரிடால்.

bypass : மாற்றுவழி; மாற்றுத் தடம்; தடமாற்றம்; வழிதிருப்புதல்; திருப்பிவிடல் : (எ-டு) இதயவலி வந்த நபருக்கு இதயத் தமனி நாள மாற்றுவழிச் சீரமைப்பு அறுவை மருத்துவம் மேற்கொள்ளப்படுதல்.

byssinosis : நுரையீரல் நோய்; தூசியேற்ற நுரையீரல் நோய், நுரையீரல் பஞ்சு நோய் : ஆலைத் தொழிலாளர்கள் பஞ்சுத் தூசியைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் நோய் வகை. நச்சினைக் காரப்பொருளாக்கும் மருந்து. இது எலும்பு மச்சையை (எலும்புச் சோறு) நலிவுறுத்தக் கூடியதாகையால், இரத்தத்தில் சீரான வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைத் தரம் இன்றியமையாததாகும்.