பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

calcaneodynia

239

calcitonin


calcaneodynia : குதிகால் வலி : நிற்கும்போது அல்லது நடக் கும்போது குதிகாலில் ஏற்படும் வலி.

calcaneofibular : பாத மற்றும் சிம்பு எலும்பு சார்ந்த : பாத எலும்பு மற்றும் சிம்பு எலும்பு தொடர்புடைய.

calcaneonavicular : பாத மற்றும் கைகால் எலும்பு சார்ந்த : பாத எலும்பு மற்றும் கைகால் படகெலும்பு தொடர்புடைய.

calcaneoscaphoid : பாத மற்றும் அங்கைப் படகெலும்பு சார்ந்த : பாத எலும்பு மற்றும் அங்கைப் படகெலும்பு தொடர்புடைய.

calcaneus : பாத எலும்பு : இணைப்பு எலும்பு மற்றும் கணு எலும்புடன் மூட்டினால் இணைந்திருக்கும் குதிகால் எலும்பு.

catchinnation : வெடிச்சிரிப்பு : பொருத்தமில்லாமல் மட்டுமே உரக்கச் சிரித்தல், இது முரண் மூளை நோயுடன் தொடர்பு உடையது.

calciferol : கால்சிஃபெரால் : 'D2' என்ற வைட்டமின் -D என்னும் ஊட்டச் சத்து வகை. இதனைச் செயற்கை முறையிலும் தயாரிக் கலாம். வைட்டமின் -D குறைபாடு காரணமாகக் குழந்தைகளுக்கு உண்டாகும் 'குழந்தைக் கணை' என்ற எலும்பு மென்மையாகும் நோயைக் (ரிக்கெட்ஸ்) குணப்படுத்த இது கொடுக்கப் படுகிறது.

calcification : சுண்ணக மயமாக்குதல்; மென்திசு சுண்ணம் ஏற்றம்; மென்திசு கரையேற்றம்; மாற்றிடச் சுண்ணமயம் : ஒரு கரிமப்பொருளி லுள்ள கால்சியம் உப்புகள் அதில் படிவதால் அந்தப் பொருள் கடினமாகிச் சுண்ணக மயமாகும் மாறுதல். இது எலும்புகளில் இயல்பாகவும், தனிமங்களில் நோயியல் முறையிலும் உண்டாகலாம்.

calcination : உலர்தல் : ஒரு தூளைத் தயாரிப்பதற்காக வறுத்தல் மூலம் உலர்த்தல்.

calcined bone : புடமிட்ட எலும்பு : உலர் வெப்பமூட்டுதல் மூலமாகத் தயாரிக்கப்பட்ட, எளிதில் தகர்ந்துவிடக்கூடிய தூளாக மாற்றப்பட்ட எலும்பு.

calcinosis : மிகைச்சுண்ணப் படிவு : 1. திசுக்களில் கால்சியம் உப்புகள் அளவுக்கு மீறி படிவதால் உண்டாகும் நோய். 2. புறத்தாலடிச் சுண்ணமயமாக்கல்.

calcipaenia : சுண்ணக்குறைபாடு : உடல் திசுக்களிலும் திரவங் களிலும் கால்சியம் குறைவாக இருத்தல்.

calcitonin : கால்சிட்டோனின் : 'C' உயிரணுக்களில் சுரக்கும் இயக்கு நீர்