பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

calciuria

241

Calmette-Guerin...


calefacient : உடல் வெப்பம் பரவுதல் : உடலின் ஒர் உறுப்பில் பயன்படுத்தப்படும் போது வெப்ப உணர்வு பரவுதல்.

calf : பின்கால் தசை : கெண்டைக் கால்காலின் பின்பகுதியிலுள்ள தசைப்பகுதி. இது கெண்டைக் கால் புடைப்புத்தசை, உள்ளங்கால் தசை ஆகியவற்றால் ஆனது.

calfess : காலுறைக் குறைவான : காலின் பின்புறச் சதைப்பகுதி.

calf muscle : ஆடு தசை.

calf-teeth : முதலில் முளைக்கும் பல்.

calibration : துல்லிய அளவீடு : அறியப்பட்டுள்ள தரநிலையுடன் அல்லது துல்லியமானது என அறியப்பட்டுள்ள ஒரு கருவியுடன் ஒப்பிட்டு ஒரு கருவியின்துல்லியத்தை அறுதியிடுதல்.

calibrator : துல்லியம் அளவீட்டுக் கருவி : குழாயின் உள் குறுக் களவுக் கூடுதல் குறைவுகளைக் கணக்கிடுவதற்கான கருவி.

calicivirus : குடல் அழற்சிக் கிருமி : கிருமியினால் கொள்ளை நோயாகப் பரவும் இரைப்பைகுடல் அழற்சியை உண்டாக்கும் கிருமி.

caliomania : தற்கவர்ச்சி : 1. ஒருவர் தனது சொந்த அழகில் நம்பிக்கை கொண்டிருத்தல். 2. அழகினால் மட்டுமே ஒரு பொருளில் இயல்புக்கு முரணாகக் கவர்ச்சிக் கொள்ளுதல்.

CALLA : கால்லா : வெள்ளைக் குருதியணுப் பெருக்கக் காப்பு மூலம். இது குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வெள்ளைக் குருதியணுப் பெருக்கம் "பி" உயிரணு நிணநீர்த்திசுக்கட்டி ஆகியவற்றின் குறியீடு.

callosity : தோல் தடிப்பு (தோல் காய்ப்பு); காய்ப்பு : அழுத்தம் அல்லது உராய்வு காரணமாகத் தோல் பரபரப்புடன் கடினமாகிவிடுதல். இது பெரும்பாலும் பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் ஏற்படுகிறது.

callosum : மூளைக்கோள இணைப்பு : மூளைக் கோளங்களில் இடையிலான பெரிய இணைப்பு.

callousness : காய்ப்பு; தடிப்பு :சொரணையின்மை.

callus : தோலின் மேல் தடிப்பு; தோல் காய்ப்பு; கல்முண்டு; இழை எலும்பு : எலும்பு முறிவு குணமாகும்போது எலும்பு முனைகளில் உண்டாகும் சுண்ணமயமாக்கிய திசு.

calmant, calmative : அமைதியூட்டும் பொருள் : நோவாற்றும் மருந்து. Calmette-Guerin bacillus : கால்மெட்-குவரின் கிருமி : காச