பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

canister

246

capacitation


canister : சிமிழ்.

canities : முடிநரை / வாய்ப்புண் : 1. முடிநரை, 2. வாயில் ஏற்படும் வலி உண்டாகும் சிறிய எரிச்சலூட்டும் வாய்ப்புண்.

canker : வாய்ப் புண்.

canker-rash : அழற் காய்ச்சல்; தொண்டைப் புண் காய்ச்சல்.

cannabis indica : கானா வாழைப் பிசின் : கானா எனப்படும் இந்தியக் கல்வாழை என்ற சணல் இனச் செடியின் பிசின். ஒரு காலத்தில் நரம்புக் கோளாறுகளின்போது மூளைப்பகுதியைச் சமனப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த மயக்கமூட்டும் மருந்தினைப் பயன்படுத்துவது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

cannibalism : மனித இறைச்சி உண்ணல் : மனித இறைச்சியை மனிதர் உண்ணுதல்.

cannon ball metastases : பீரங்கிக் குண்டு உறுப்படை மாற்றம் : நுரையீரலினுள் உள்ள உருண்டை வடிவமான ஒன்று அல்லது பல பெரிய உறுப்பிடை மாற்றக் கரணைகள். இவை சிறுநீரக உயிரணுப் புற்றுநோய்.

cannon sound : பீரங்கி ஒலி : இதயம் முழுமையாக அடைபடும் போது, முதல் இதய ஒலியின் தீவிரம், துடிப்புக்குத் துடிப்பு மாறுபடுகிறது. இந்த வெடிப்பு ஒலி, பீரங்கி அலைகளுடன் ஒத்திருப்பதில்லை.

cannula : குழாய்க்கருவி; உடல் வடிகுழாய்; கடின வடிகுழாய் : துளைக்கருவி உட்கொண்ட குழாய்க்கருவி, உடலில் திரவங்களைச் செலுத்தவும், உடலிலிருந்து திரவங்களை வெளியே எடுக்கவும் பயன்படுகிறது.

cannulate : குழாய்க்கருவி செருகுதல் : ஒர் இடைவெளி வாயிலாக ஒரு குழாய்க் கருவியைச் செருகுதல்.

cannulation : குழாய்க்கருவி செலுத்துதல் : துளைக்கருவி உட் கொண்ட குழாய்க்கருவியை உடலினுள் செலுத்துதல்.

cantharides : கொப்புள ஈ : கொப்புளம் உண்டாகப் பயன் படுத்தப்படும் ஈ வகை.

canthus : கடைக்கண் : கண் இமைகள் கூடுமிடத்திலுள்ள கோணம்.

capacitance : மினேற்றச் சேமிப்புத் திறன் : ஒரு மின் ஏற்றத்தைச் சேமிப்பதற்கான திறன்.

capacitation : திறனூட்டம் : பெண்ணின் இனப்பெருக்கக் குழாயில் நிகழும் செயல்முறை. இது விந்தணு முட்டைகள்