பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carbromal

251

carcinomatous


carbromal : கார்புரோமால் : ஒரு வகைத் தூக்கமருந்து.

carbuncle : அரசபிளவை; பிளவைக்கட்டி; பிளவை : பல மயிர் மூட்டுப்பைகளிலும், சுற்றுப்புறத் தோலடித் திசுக்களிலும் ஏற்படும் கடுமையான கட்டி. இதில் சீழ் வெளி வருவதற்குப் பல வாய்கள் இருக்கும்.

carcholin : கார்கோலின் : கார்பக்கால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

carcinogen : புற்றுத் தூண்டு பொருள்; (கார்சினோஜீன்), புற்று ஊக்கி; புற்றுச்சினை : புற்றுநோய் வளரத் தூண்டுகிற ஒருபொருள் அல்லது கிருமி.

carcinogenesis : புற்று நோயாக்கம் : புற்றுநோயை வரவழைத்தல்,

carcinogenic : புற்றுநோய் சார்ந்த : புற்றுநோய் உண்டாக்குகிற.

carcinoid syndrome : புற்றுப் போல் கட்டி; புற்றுருவான : குடல் வாலில் உண்டாகும் உயிர்த் தசைமங்களைப் பொறுத்து உக்கிர வேகமுடையதாகவும், மருத்துவத்தைப் பொறுத்துப் பெரும்பாலும் கடுமையின்றியும் இருக்கும் கட்டி. இதிலிருந்து செரோட்டோனின் எனப்படும் பொருள் சுரக்கிறது. இப்பொருள், மிருதுவான தசையைத் தூண்டி, வயிற்றுப் போக்கு (பேதி), ஈளை நோய் சார்ந்த இசிப்பு, முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப் பாய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை உண்டாக்குகிறது.

carcinoma : எலும்புத் தசைப் புற்று; பிளவை; புற்றுநோய் : எலும்புத் தசை, உயிரணுக்கள், உள்ளுறுப்புகள் போன்ற புற அடர் படலத் திசுக்களிலும் சுரப்புகளிலும் புற்று நோய் போன்ற வளர்ச்சி உண்டாதல். இதில் நோய்க்குறிகள் புலனாவதில்லை. இதிலுள்ள உயிரணுக்கள், புற்றுநோய் உயிரணுக்களைப்

எலும்புத் தசைப் புற்று