பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carpometacarpal

259

carvallo's sign


மரமரப்பு. கூச்சம், ஆகியவை தசை நார்த்தளையின் கீழே நரம்பு செல்லும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்நோய் உண்டாகிறது. நடுத்தர வயதுப் பெண்களுக்கு இந்த நோய் பெரும்பாலும் உண்டாகும்.

carpometacarpal : மணிக்கட்டு; எலும்பு மண்டலம் தொடர்பான : மணிக்கட்டு, உள்ளங்கை எலும்புகள், அவற்றை இணைக்கும் தசைநார்கள் ஆகியவை தொடர்புடைய.

carpopedal : கைகால் இசிப்பு : கைகள், பாதங்கள் தொடர்பு டைய நோய் உறுப்புச் சுருக்கம் காரணமாக உண்டாகும் முறை நரப்பிசிவில் கைகள் பாதங்களின் இசிப்பு ஏற்படுகிறது.

carrier : நோய் கிடத்தி; நோய்ப் பரப்பி; தாங்கி : தான் நோய்க்குட்படாமல் நோய்க் கிருமியைப் பரப்பும் உயிரினம்.

carrion's disease : கேரியோன் நோய் : வேளாண்மைப் பணி களினால் உண்டாகும் ஒருவகை நோய், இந்த நோய்க்கிருமிகளைத் தன் உடலுக்குள் தானே ஊசியால் செலுத்திக்கொண்டு இறந்து போன டேனியல் கேரியோன் என்ற பெரு நாட்டு மாணவன் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

cartiage : குருத்தெலும்பு; குருத்து : அழுத்தத்தைத் தாங்க வல்ல அடர்த்தியான இணைப்புத் திசு. இது செயற்படும் முறை யைப் பொறுத்து இது பல வகைப்படும். ஒரு குழந்தையின் எலும்புக்கூட்டில் அதிகமான குருத்தெலும்புகள் உள்ளன, குழந்தை வளர்ந்து உரிய வயதடையும்போது இந்தக் குருத்தெலும்புகளில் பெரும் பாலானாவை எலும்புகளாக மாறி விடுகின்றன.

cartilaginoid : குருத்தெலும்பு போன்ற.

cartiloginous : குருத்தெலும்புக்குரிய; குருத்தெலும்பாலான.

caruncle : தசைத் திரளை; தசை மேடு : வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை முதிரா இளமைப் பருவத்தில் பெண் குறியின் புறவாயை முடியிருக்கும் தாள் போன்ற மைத் திரைச் சவ்வில் ஏற்படும் தசைத் திரளையானது கன்னிமைத் திரைச் சவ்வினைக் கிழித்து விட்டுக் கருப்பைக் குழாய் வாயைச் சூழ்ந்து கொள்கிறது. கண்ணீர் சார்ந்த தசைத் திரளானது, கண்ணின் உட் கோணத்தில் தசைத் திரளையாக முனைப்பாக வளர்கிறது.

carvallo's sign : கார்வாலோ ஒலிக்குறி : இரைப்பைக் காப்பு