carver
260
caseinogen
வாயில் மூவிதழ் சுருக்கமுடைய நோயாளிகள் மூச்சிழுக்கும் போது இதயச் சுருக்கத்துக்கு முன்பு ஏற்படும் முணுமுணுப்பு ஒலி அதிகமாக இருத்தல். இதனை உட்கார்ந்த நிலையில் நன்கு கேட்கலாம். ரிவெரோகார்வாலோ என்ற மெக்சிக்கோ மருத்துவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
carver : செதுக்குக் கத்தி : பல் மருத்துவத்தில் உலோகப்பூச்சு அல்லது மெழுகு மாதிரியை செதுக்குருவாக்கம் செய்வது போல் ஒரு பொருளை வடிவம் அமைப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு கத்தி அல்லது ஒரு கருவி.
cascade : தொடர்செயல்முறை : தானே பரப்பும் அல்லது விரிகாக்கம் செய்யும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இதில், இறுதிக் கட்டத்தை எட்டும் வரையில், ஒவ்வொரு செயல்முறையும் அடுத்த செயல் முறையைத் தொடங்கி வைக்கிற வகையில் அமைந்த தொடர் செயல்முறைகள் அமைந்திருக்கும்.
cascara : குடலிளக்கப்பட்டை : குடலிளக்கும் மருந்தாகப் பயன் படும் வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில மரப்பட்டை வகை. இப்பட்டையிலிருந்து மாத்திரைகளும், திரவமும், வடிநீரும் தயாரிக்கப்படுகின்றன.
case : நோய் நிகழ்வு : (1) நோய் நிகழ்தல் (2) ஒரு நோயாளி (3) உறை.
caseate : பாலுறைவு : உறைபாற் கட்டியாக மாறுதல்.
caseation : உறைச்சளிக் கட்டி; பாலாடைக் கூழ்மை : காச நோயில் ஏற்படுவது போன்று ஒரு மென்மையான பால் போன்ற சளிக்கட்டி உருவாதல்.
case-book : மருத்துவத் தொழில் முறைக்குறிப்பேடு.
case hardening : கரியகக் கடும்பதப்படுத்தல் :பரப்பில் கரியக மூட்டுவதன் மூலம் இருப்பைக் கட்டுப்படுத்துதல்.
casein : பால் புரதம் : உறைபால் கட்டியின் அடிப்படைக் கூறு. பால் இரைப்பையில் நுழைந்ததும் உண்டாகிற ஒருவகைப் புரதம். இது கால்சியத்துடன் இணைவதால் திட்பமாகிறது.
caseinogen : பால் புரதமூலம் : பாலிலுள்ள முக்கியமான புரதம். இது நீரில் கரைவ தில்லை. ஆனால் கரிமமில்லா உப்புகளினால் (அனங்க உப்புகள்) இது பாலில் கரைசலாக வைத்திருக்கப்படுகிறது. நீரில் கரையக் கூடியதும் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக்கூடியதுமான பால் கருப்புரதத்தின் வீத அளவு, தாய்ப்பாலை