பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Catacrotic

263

Catarrh


catacrotic : நாடித்துடிப்பு குறுக்கு வெட்டு : நாடித் துடிப்புப் படியெடுப்பின் கீழ் நோக்கிய கோட்டின் மீது மேல்நோக்கிய குறுக்கு வெட்டு.

catagen : கேட்டஜென் : முடி வளர்ச்சிச்சுழற்சியில் வளர்ச்சிக்கும், ஒய்வுநிலைக்கு மிடையிலான இடைநிலை.

catalase : ஊக்குபொருள் : மனிதர் உயிரணுக்களில் ஹைட் ரஜன் பெராக்சைடு முறிவினை ஊக்குவிப்பதற்காக உள்ள ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) நொதி.

catalepsy : விறைப்புநிலை : தன்னை மறந்த ஒரு மயக்க நிலை. இந்த நிலையில் முகம், உடம்பு, உறுப்புகள் ஆகியவற்றின் தசைகள் ஒரு விறைப்பான நிலையில் இருக்கும்.

catalysis : இயைபியக்க ஊக்கு விப்பு : தான் மாறாமல் மற்றப் பொருள்களில் வேதியியல் மாற்றம் உண்டாக்கத் துணை செய்தல்.

catalyst : இயைபியக்க ஊக்கி; வினையூக்கி, கிரியா வினையூக்கி; ஊக்கி : இயைபியக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு மருந்து. இது இந்த வினையின்போது தான் எந்தவித மாற்றமும் அடைவ தில்லை.

catalytic antibody : வினையூக்கத் தற்காப்பு மூலம் : உயிரியல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு செரிமானப் பொருள். இதில் ஒரு ஒற்றைப் பால்படு நோய் எதிர்ப்பொருளின் சேர்ந்து தெரிந்தெடுத்த பிணைப்புப் பகுதிக்குள் புகுத்தப்படும் வினை ஊக்கவினை நடைபெறுகிறது.

catamnesis : சிகிச்சைத் தொடர் வரலாறு : நோயாளியின் சிகிச்சைக்குப் பிந்திய தொடர் வரலாறு.

cataplasm : மாபசை; பற்று : வீக்கத்திற்குக் கட்டுகிற மாப்பசை.

cataplexy : அசைவற்ற நிலை; துயிற்சோர்வு : கடுமையான மன அதிர்ச்சி அல்லது அச்சம் போன்ற உணர்ச்சியினால் தசை விறைப்பு உண்டாகி ஏற்படும் அசைவற்ற நிலை. இந்த நிலையின் போது நோயாளி நினைவுடனேயே இருப்பார்.

cataract : கண்புரைநோய் (கண்படலம்); விழிப்புரை; புரை : முதுமை காரணமாகக் கண்ணின் விழி ஆடியில் வெண்படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல். இது பிறவி நோயாகவோ, முதுமை, நோய், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், நீரிழிவு காரணமாகவோ ஏற்படலாம்.

catarrh : மூக்கடைப்பு; தடுமன்; சளிமூக்கு; கபக்கட்டு : தடுமன்;