பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cavitron

267

cell block


காசநோயில் ஏற்படுவது போல குழிவுகள் தோன்றுதல்.

cavitron : கேவிட்ரான் : செவிப்புலன் கடந்த ஒலியலை அறுவைச் சிகிச்சை உடல் நீர் வாங்கி என்ற கருவியின் வணிகப்பெயர்.

cavity : உட்குழிவு; புண் குழி; வளை; பொந்து குழிவு : ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்டு ஆகும். மூக்கில் உள்ள உட்குழிவை மூக்கின் இரு முளைகளின் இடைப்பகுதி இரு பாதி களாகப் பிரிக்கிறது.

CCU : இதயக் கவனிப்புப் பிரிவு : இதயக் கோளாறுகளுக்குத் தீவிரச் சிகிச்சையளிக்கும் பிரிவு.

CDH : இடுப்புமூட்டுஇடப் பெயர்வு : பிறவியிலேயே இடுப்பு மூட்டு இடம் பெயர்ந்திருத்தல்.

cedilanid : செடிலானிட் : லானாட் டோசைட்-C என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cedocard : செடோகார்ட் : சோர் பிடெனிட்ரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ceffeinism (caffeism) : காஃபி நஞ்சேற்றம்; காஃபின் நோய் : காஃபி, தேயிலை போன்ற குடிவகைகளிலுள்ள மர உப்புப் பொருளினால் உண்டாகும் கோளாறு நிலை.

ceftriaxone : செஃப்டிரியாக்சோன் : மேகவெட்டை நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் செஃபாலோஸ்பெரின் என்னும் மருந்து.

cefuroxime : செஃபுரோக்சிம் : பெனிசிலினை எதிர்க்கும் நுண் உயிரிகளுக்கு எதிராகப் பயன் படுத்தக்கூடிய ஒருவகை மருந்து.

celbenin : செல்பெனின் : மெத்திசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

celevac : செலிவாக் : மெத்தில் செல்லுலோஸ் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

cell : ஒருயிரணு : ஒர் உட்கருவை கொண்டுள்ள ஒரு நுண்ணிய ஊன்மம். இரத்தச் சிவப்பு அணுக்கள் போன்ற சில உயிர் அணுக்களில் உட்கரு இருப்பது இல்லை. வேறு சில உயிர் அணுக்களில் பல உட்கருக்கள் உள்ளன.

cell bank : உயிரணு வங்கி : மிகவும் தாழ்ந்த வெப்ப நிலை யில் உயிரணுக்களை உறைய வைத்துப் பாதுகாத்தல்.

cell block : உயிரணுத்தொகுதி : நுரையீரல், இதய மேலுறை,