பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

certified patients

274

cestoda


certified patients : சான்றளிக்கப்பட்ட நோயாளிகள் : 1956 ஆம் ஆண்டு மனநலச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மனநோய் மருத்துவமனையில் இருந்து தானாகவே வெளிச் செல்ல முடியாதிருந்த நோயாளிக்கு 'சான்றளிக்கப்பட்ட நோயாளிகள்" எனக் குறிப்பிட்டனர். இப்போது இவர்களை "இருத்தி வைக்கப்பட்ட நோயாளிகள்"என்கின்றனர்.

certified milk : சான்றளிக்கப்பட்ட பால் : என்புருக்கி நோய் (காசநோய்) கிருமிகள் தொடர்பற்றதெனச் சான்றளிக்கப்பட்ட பால்.

cerumen : காது அழுக்கு; காது குரும்பை; காது மெழுகு; குரும்பை; குரும்பி: புறக்காதுக் குழாயிலுள்ள தனிவகைச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும், பழுப்புநிற மெழுகு போன்ற அழுக்கு. இந்த அழுக்கினை எடுக்கப் பயன்படும் காதுக் குரும்பி.

ceruminolysis : காதுமெழுகுப் பகுப்பாய்வு : காதுமெழுகினைக் கரைத்தல்.

ceruminous gland : செவிப்புலன் சுரப்பி : புறச்செவிப்புலன் குழாயை இணைக்கிற தோலிலுள்ள திருத்தியமைத்த வியர்வைச் கரப்பி.

cervical : கழுத்துச்சார்ந்த; கருப்பைக் கழுத்துசார் : ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி சார்ந்த

cervicectomy : கருப்பைக்கழுத்து அறுவை மருத்துவம்; கருப்பை அகற்றல்; கருப்பை நீக்கல் : கருப்பைக் கழுத்தினை அறுத்து எடுக்கும் அறுவை மருத்துவம்.

cervicitis : கருப்பைக் கழுத்து அழற்சி; கருப்பை வாய் அழற்சி; கருப்பை அகற்றல் : கருப்பையின் கழுத்தில் ஏற்படும் வீக்கம்.

cervix : கருப்பை வாய்; கருப்பைக் கழுத்து : ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி. கருப்பையின் கழுத்து.

cesium : சீசியம் : ஒர் உலோகத் தனிமம். இதன் அணுஎண் 55. இதன் புற்றுநோய் திசுக்களை ஒளிவீசும்படி செய்வதற்காக இதன் ஓரகத் தனிமங்கள் பயன் படுத்தப்படுகின்றன.

cestoda : தட்டைப்புழு வகை : நாடாப்புழுக்கள், சவ்வுப்புழக்கள் உள்ளடங்கிய தட்டைப் புழுக்குடும்பத்தின் ஒர் உட் பிரிவு. இவை ஒரு நாடாப் புழுவின் தலையையும் ஒரு சங்கிலித் தொடர் கூறுகளையும் கொண்டிருக்கும்.