பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

challenge

276

Charcot-Marie...


challenge : எதிர்த்துண்டல் : ஒரு தொற்றுத்தடை முறையின் பயன்திறனைப் பரிசோதிப்பதற்காக, ஒவ்வாமை விளைவுகளை உண்டாக்கும் ஒரு பொருளை (காப்புமூலம்) தொற்றுத் தடை செய்யப்பட்ட மனிதருக்கு அல்லது விலங்குக்குச் செலுத்துதல்.

chalone : செயல் தடுப்புக் கசிவு : செயல் தடுக்கும் உட்கசிவு.

chancre : கிரந்திப்புண்; வன் கிரந்தி; மேகப்பிளவை : நிணநீர்ச் சுரப்பிகளின் வீக்கத்தால் உண்டாகிறது.

chancroid : கிரந்தி போன்ற புண்; தொற்றுக் கிரந்தி; பால் நோய்க் கட்டி; மென் கிரந்தி : தொற்று மூலமாக மட்டுமே வரும் கிரந்தி நோய். இதனால் ஆண் குறியிலும் பெண்களின் கரு வாயிலும் வலியுடன் புண்கள் உண்டாகின்றன. வன்கிரந்தியில் அவ்வளவாக வலியிருக்காது.

channel : செல்வழி : பல்வேறு பொருள்கள் பாய்வதற்கு இயல் விக்கும் ஒரு கடப்புக் குழாய், தடம் அல்லது வழி. chapless கீழ்த்தாடையற்ற.

character : பண்பு; நடத்தை; இயல்பு : ஒருவரின் ஒட்டு மொத்த மன இயல்புகள்; குறிப்பாக அவரது நடத்தைமுறை நோயாளியின் இயல்பான நடத்தையிலிருந்து மாறுபட்ட விசித்திர நடத்தை முறையாக இருக்கலாம். வழக்கமாக மரியாதைக்குரியவராக நடந்து வந்தவர் இழிவாக நடந்து கொள்ளுதல் மனநோய் மூளைநோயின் காரணமாக இருக்கலாம்.

Charcot-Bouchard anuerysm : சார்கொட்-பூஷார்ட் நோய்/நுண் தமனி விரிவாக்கம் : உயர் இரத்த அழுத்தம் காரணமாக மூளையின் ஒரு சிறிய தமனியில் உண்டாகும் ஒரு நுண்விரி வாக்கம். இது ஜீன் சார்கோட், சார்லஸ் பூஷார்ட் என்ற மருத்துவ அறிஞர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.

Charcot-Leyden : சார்கோட்-லேடன் படிகம் : ஆஸ்துமாவிலுள்ள சளியில் அல்லது பெருங்குடல் சீழ்ப்புண்ணிலுள்ள நரகலில் காணப்படும் நிறமற்ற, கோணவடிவ, ஊசி போன்ற படிகம். ஜீன் சார்கோட், ஜெர்மன் மருத்துவ அறிஞர் எர்னெஸ்ட் லேடன் ஆகியோரின் பெயரால் அழைக் கப்படுகிறது.

Charcot-Marie-Tooth disease : சார்கோட்-மேரி-பல் நோய் : காலின் வெளிப்புறத்திலுள்ள சிம்பு எலும்புத்தசைத் தேய் மானம். ஃபிரெஞ்சு நரம்பியல் வல்லுநர்கள் ஜீன் சார்கோட்,