பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

charcots triad

277

cheek


பியர்மேரி, பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் ஹோவர் டூத் ஆகியோரின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது.

Charcot's triad : சார்கோட் மூவினை நோய் : 1. கண் விழிகள் ஒயாமல் ஊசலாடும் விழிநடுக்கம், மனநடுக்கம், தெற்றுவாய் ஆகிய மூன்றும் இணைந்த நோய். இது நுரையீரல் தடிப்பின்போது உண்டாகிறது. (2) விட்டுவிட்டு காய்ச்சல் வருதல், விட்டுவிட்டு வலி உண்டாதல், விட்டு விட்டு மஞ்சள் காமாலை ஏற்படுதல் ஆகிய மூன்றும் இணைந்த நோய். இது கடுமையான பித்தப்பை அழற்சியின்போது காணப்படும்.

charcots joint : சாக்கோட் மூட்டு : இயங்குகிற உடலுறுப்புகளில் ஒரு முட்டு ஒத்தியங்க முடியாமல் முற்றிலுமாகத் தாறுமாறாக இருத்தல். இந்த நிலையில் நோவு இருப்பதில்லை.

Charles law : சார்லஸ் விதி : ஒரு குறிப்பிட்ட அளவு வாயு, மாறாத வெப்பநிலையில் அதன் முழுவெப்ப நிலைக்கு நேர்விகிதத்தில் தனது கனஅளவை விரிவாக்கம் செய்கிறது. இந்த விதியை ஃபிரெஞ்சு இயற்பிய லறிஞர் ஜேக்ஸ் சார்லஸ் விளக்கிக் கூறினார்.

chart : வரைபடம் : 1. ஒரு நோயாளியினுடைய நோயின் போக்கை ஆவணப்படுத்திக் காட்டும் ஒரு வரைதாள். இதில், வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாச வேகவீதம், இரத்த அழுத்தம், உடல் எடை, உட்கொள்ளும் திரவத்தின் அளவு, வெளியேறும் திரவத்தின் அளவு ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கும். 2. பல் தொடர்பான ஊடுகதிர் பட முடிவுகள் பதிவு செய்யப்படும் மருத்துவ வரை படம்.

chaude-pisse : சிறுநீர்வாய் எரிச்சல் : மிகைச் சிறுநீர்க் கழி வின்போது ஏற்படும் எரிச்சல் உணர்வு.

check : தடுப்பு : 1. சரிபார்த்தல். 2. தடுத்து நிறுத்துதல். 3. பல்லின் பதிவை எடுப்பதற்காகப் பயன்படும் கடிப்பதற்குக் கடினமான மெழுகு.

checkup : பரிசோதனை : உடல் நிலையைக் கண்டறிவதற்காக ஒரு மருத்துவர் மருத்துவ முறையில் உடலைப் பரிசோதனை செய்தல்.

cheek : கன்னம் : 1. கண்ணுக்குக் கீழே வாயின் பக்கவாட்டச் சுவராக அமைந்துள்ள முகத்தின் பக்கம். 2. உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ள பிட்டப்பகுதி