பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chicken-heart

282

chine


chicken-heart : கோழை நெஞ்சு.

chicken-pox : சின்னம்மை; தட்டம்மை; பயற்றம்மை; நீர்க்கொள்வான் :இது முதலில் இடுப்பில் தோன்றி சிறு சிறு கொப்புளங்களாக வெடிக்கும். இவை பொருக்காகி, தழும்பு இன்றி ஆறிவிடும்.

chikungunya : இரத்தப்போக்குக் காய்ச்சல் (சிக்குன்குன்யா) : வெப்ப மண்டலங்களில் கொசுவினால் உண்டாகும் ஒருவகை இரத்தப் போக்கு ஏற்படும் காய்ச்சல் வகையில் ஒன்று.

chilblain : குளிர்க் கொப்புளம்; பனி வெடிப்பு : கடுங்குளிரினால் ஏற்படும் சுன்றிய கைகால் கொப்புளம். இதனால் கடுமையான நமைச்சல் ஏற்படும்.

child : குழந்தை : கைக்குழந்தை நிலைக்கும் முதிர்வு நிலைக்கும் இடைப்பட்ட மனிதர். குழந்தைக்கு உடலாலும், உணர்வாலும், பாலிய லாலும் ஊறு விளைவித்தல். கருக்குழந்தையைப் பெற்றெடுத்தல். ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் செயல்முறை.

child bed : பேறுகால நிலை; பிள்ளைப் பேற்று நிலை.

child birth : பிள்ளைப்பேறு; குழந்தை பெறுதல்.

child mishandling : குழந்தை உருக்குலைவு நோய் : குழந்தையை உருக்குலையும்படி செய்யும் நோய்.

chilomastix : ஒட்டுண்ணி உயிரி : பெருங்குடல் வாயிலும், பெருங் குடலிலும் கூட்டுவாழ்வு உயிரிகளாகக் காணப்படும் ஒர் ஒட்டுண்ணி ஓரணுவுயிர்.

chimerism : மாற்று மரபணு உயிரணு : ஒர் ஆளின் உயிர் அணுக்களில் மரபணுமுறையில் மாறுபட்ட உயிரணுக்கள் இருத்தல். இந்த உயிரணுகள் இருவேறு சூல் முட்டைகளிலிருந்து வந்து இருப்பதே இதற்குக் காரணம். இதனால் நோய் எதுவும் உண்டாவ தில்லை.

chimney sweep's cancer : புகைபோக்கி ஒற்றடைப் புற்று நோய் : புகைபோக்கியில் படியும் ஒற்றடை போன்று விதைப்பையில் உண்டாகும் புற்றுநோய் வகை.

chin : முகவாய்க்கட்டை : கீழ் உதட்டுக்குக்கீழேயுள்ள கீழ்த் தாடையில் எடுப்பாகவுள்ள புறப்பகுதி.

chincough : கக்குவான் இருமல்.

Chine துண்டெலும்பு : முதுகெலும்புக் கணு.