பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Chinese lantern...

283

chiropractor


Chinese lantern site : சீன ஒளிப்புழை : பச்சிளங் குழந்தையின் மண்டையோட்டின் ஊடுறுப் பொளியூட்டம். இது மூளை நீர்க்கோர்ப்பும், மயிர்க்கண் துளை நீர்க்கோர்ப்பும் உடையது. மூளைக்கோளங்கள் இன்மை யால் ஒளி ஊடுருவும் தன்மை இல்லாது இருப்பதை இது காட்டுகிறது.

chinese restaurant syndrome: சீன உணவக நோய் : மானோ சோடியம் கிளட்டா மேட் எனப்படும் சீன உணவகங்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத் தும் பொருளினால் உண்டாகும் மிகு உணர்ச்சித்திறன் காரணமாக திடீரென விளையும் ஒவ்வாமை விளைவு. இதனால் கடும் தலைவலி, மரமரத்தல், நீர்வேட்கை, படபடப்பு, அடிவயிற்றிலும் நெஞ்சிலும் வலிகள், வியர்த்தல், குருதிப் பாய்வு ஆகியவை உண்டாகும்.

chink : திணறல்; மூச்சு வாங்க முடியா எய்ப்பு நிலை.

chiniofon : சினியோஃபான் : நோய்த்தடுப்பு மருத்தவத்திலும் கடுமையான வயிற்றுப்பூச்சி நோய்க்காகவும் பயன்படுத்தப் படும் வயிற்றுப்பூச்சிக் கொல்லி மருந்து.

chirality : பக்கவடிவம் : ஒரு பக்க மாகத் திரிபடைதல் போன்று மூலக்கூறுகளில் ஏற்படும் சமச் சீரின்மை. ஒரு மூலக்கூறின் முப்பரிமாண வடிவம். இது இடப்பக்க வடிவமாகவோ வலப்பக்க வடிவமாகவோ இருக்கலாம்.

chiropodist : கால்நோய் மருத்துவர்; கால் காய்ப்பு; விரல் உகிரர் : காலின் காய்ப்பு, விரல் கணு வீக்கம், மெய்க்குரு போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்.

chiropody : கால்நோய் மருத்துவம் : காலின் காய்ப்பு, விரல் கணுவீக்கம், மெய்க்குரு முதலியவற்றுக்கான மருத்துவம்.

chiropractice : வர்ம மருத்துவம் : ஒரு மனிதனின் உடல் நிலைக்கு அவனது நரம்பு மண்டலம் மட்டுமே முழுமுதற் காரணம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒர் உடல் நலக்காப்பு முறை.

chiropractice : வர்ம மருத்துவர்; கரப்பொருத்து : தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயற் தடுப்பு நோவினைக் குணப்படுத்தும் முறை.

'chiropractor : வர்ம மருத்துவம்; கரப்பொருத்தர் : தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுப்பு நோவினைக் குணப் படுத்தும் மருத்துவர்.