பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chlamydiae

284

chlorcyclizine


chlamydiae : திண்தோல் சிதல் நோய்க்கிருமி : பறவைகளிடமும், மனிதரிடமும் திண்தோல் சிதல் நோய் உண்டாக்கும் நோய்க்கிருமி போன்ற நுண்ணுயிரிகள். இந்நோயில் சிலவகை, பறவைகள் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. பாலுறவு வழியாகவும் இந்நோய் பரவுகிறது. இந்நோய் கண்ட குழந்தைகள் அதிக அளவில் பிறக்கின்றன. இது கண்ணிமை அரிப்பு நோய்க்கும் காரணமாக இருக்கிறது.

chiamydiosis : திண்தோல் சிதை நோய் : திண்தோல் சிதல் நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒரு கோளாறு அல்லது நோய்.

chloral : குளோரல் : காரமான நெடியுடைய எண்ணெய் போன்ற திரவம்.

chlorambucil : குளோராம்புசில் : கடும் நிணநீர்ப்புற்று, நிணநீர்த் திசுக்கட்டி ஆகிய நோய்களில் பயன்படுத்தப்படும் காரச்சார்பு உயிரணு நஞ்சேற்ற வினையூக்கி.

chloramine T : குளோராமைன்-T : காயங்களில் தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் நச்சு நீக்கி மருந்து.

chloraemia : மிகுகுளோரைடு நோய் : இரத்தத்தில் குளோரைடு அளவு மிகுதியாக இருக்கும் நோய்.

chloasma : தவிட்டுப்படை; மங்கு : தோலில், முக்கியமாக முகத்தில், பொன் தவிட்டு நிறத்தில் படரும் படை நோய். பெண்களுக்குக் கருவுற்றிருக்கும் போது இது உண்டாகிறது.

chloral hydrate : குளோரல் ஹைட்ரேட் : நரம்புத் தளர்ச்சியினால் உறக்கமின்மை ஏற்படும்போது கொடுக்கப்படும் விரைவாகச் செயற்படும் சமனப்படுத்தும் மருந்து.

chloralism : குளோரின் உலர் வெறியப் பழக்கம் : குளோரின் (பாசிக) உலர்வெறியம் தரும் மயக்கக் கோளாறு.

chlorambucil : குளோராம்புசில் : அறுவைச் சிகிச்சையின்போது நோய்க்கிருமித் தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் மருந்து.

chloramphenical : குளோராம் ஃபெனிக்கோல் : அநேகமாக வாய்வழியாகக் கொடுக்கப்படும் உயிர்க்கொல்லி மருந்து நச்சுக் காய்ச்சல் (டைபாய்டு) போன்ற நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது.

chiorcyclizine : குளோர்சைக்ளிசின் : புண்ணுண்டாகிய