பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28

சமுதாயப் புரட்சி இவை ஐரோப்பாக் கண்டத்தில் தோன்றி, அறிவியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் வித்திட்டன.

பலவாறான ஆராய்ச்சிகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. பல புதிய கண்டுபிடிப்புகள் உலகுக்கு அறிமுகமாயின. இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று, புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பல அறிவியல் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு, உலகுக்கு அறிமுகமாயின. இவைகளை ஆங்கிலச் சொல் என்றோ, ஜெர்மானியச் சொல் என்றோ, ஜப்பானியச் சொல் என்றோ சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு புதிய கண்டு பிடிப்பையும் யார் முதலில் உலகுக்கு வழங்குகிறார்களோ அவர்கள் அவைகளை விளக்க உருவாக்கிய சொற்களை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கண்டுபிடிப்புக்களுக்கு எப்படி அவர்களைச் சொந்தக்காரர்கள் என்று சொல்கிறோமோ அதைப் போலவே அவர்கள் உருவாக்கிய சொற்களும் அவர்களுடைய படைப்புக்களே. அந்தச் சொற்களை அறிவியல் மக்கள் சமுதாயம் - உலகப் பொதுச் சொற்களாகத் தான் கருத வேண்டும்" என்பதே அந்த அம்மையார் தந்த விளக்கம். இந்த முறையில் "வைரஸ்", "லேசர்", "பெனிசிலின்", "மார்ஃபின்" போன்ற பல சொற்களை நாம் அப்படியே பயன்படுத்தினாலும்கூட ஒரு அறிவியல் மருத்துவக் களஞ்சியத்தில் அந்த சொற்கள் உருவாகிய அடிப்படை வரலாற்றையும் குறிப்பிட்டு எழுதும்போதுதான் அதன் பொருளும் விளக்கமும் முழுமையாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

சோதனைக் குழாய், புதை சாக்கடை, கட்டி, கரப்பான், புற்று, காசம், ஈளை, இருமல் போன்ற பல சொற்கள் ஏற்கெனவே தமிழ் வழக்கில் இருக்கின்றன. இப்படி ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொற்களை இன்றும் அறிவியல் கருத்துக்களை எடுத்தியம்பும்போது பயன்படுத்து-