பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cholinomimetic

292

chondrotomy


cholinomimetic : கோலின் ஒப்புப்பொருள் : அசிட்டில் கோலினை ஒத்த வினையுடைய பொருள்.

choluria : பித்தநீரில் சிறுநீர் : 1. பித்தநீரில் சிறுநீர் இருத்தல். 2. பித்தநீர் நிறமிகளினால் சிறு நீர் நிறம் மாற்றமடைதல்.

chondral : குருத்தெலும்பு சார்ந்த.

chondrectomy : குருத்தெலும்பு அறுவைச் சிகிச்சை : ஒரு குறுத்தெலும்பை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

chondrin : எலும்பு குருத்து மூலம்.

chondritis : குருத்தெலும்பு வீக்கம் : குருத்தெலும்பு அழற்சி.

chondrodynia : குருத்தெலும்பு நோவு.

Chondrolysis : குருத்தெலும்பு கரைதல்.

chondroma : குருத்தெலும்புக் கழலை; குருத்தெலும்புக் கட்டி : குருத்தெலும்பில் உண்டாகும் கடுமையாக இராத கழலை. இதனை அகற்றிய பின்பும் மீண்டும் ஏற்படலாம்.

chondroblast : முதிராக்குருத்தெலும்பு : உயிரணுவை உற்பத்தி செய்யும் முதிரா குருத்தெலும்பு.

chondroblastoma : எலும்பு முனைக்கட்டி : வயது வந்தவர்களின் நீண்ட எலும்புகளின் எலும்பு முனைகளில் உண்டாகும் ஒரு வலியற்ற கட்டி. இதில் கருப்பைக் குருத்தெலும்பு போன்ற இழையம் மிகுந்த திசுக்கள் அடங்கியிருக்கும்.

chondromalacia : குருத்தெலும்பு மென்மையாதல்.

chondrodysplasia : எலும்பு முனை வளர்ச்சித்தடை : நீண்ட எலும்புகளின் எலும்பு முனைகளின் வளர்ச்சியைச் சீர்குலைத்தல். இது நீண்ட எலும்புகளின் வளர்ச்சி, குறுக்கம் ஆகியவற்றைத் தடைசெய்கிறது.

chondroitin sulphate : கோண்டிராய்ட்டின் சல்ஃபேட் : இணைப்புத் திசுக்களில், குறிப்பாகக் குருத்தெலும்பு, எலும்பு, குருதி நாளங்கள், விழி வெண்படலம் ஆகியவற்றின் ஆதாரப் பொருளில் காணப்படும் ஒரு கிளைக் கோசாமினோகிளைக்கான்.

chondrophyte : கோண்ட்ரோஃபைட் : ஒரு எலும்பின் எடுப்பான பகுதியில் வளரும் இயல்பு மீறிய எலும்புத் திரட்சி.

chondrosarcoma : குருத்தெலும்பு ஊன்ம வளர்ச்சி : குருத்தெலும்பில் ஏற்படும் உக்கிரமான ஊன்ம வளர்ச்சி.

chondrosis : குருத்தெலும்பாக்கம் : குருத்தெலும்பு உருவாதல்.

chondrotomy : குருத்தெலும்புப் பிளவு : குருத்தெலும்பையும் அறுவைச் சிகிச்சை மூலம் பிளத்தல்.