பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chorioid

294

choroid


chorioid : கருப்பை புறத்தோல் போன்ற.

choriomeningitis : கருப்பை அழற்சி : குளோராய்ட் நரம்பு வலையினுள் நிணநீர் ஊடுருவுவதால் உண்டாகும் முளை அழற்சி நோய்.

chorion : கருப்பைப் புறத்தோல்; கரு வெளியுறை; சவ்வுறை : கருப்பையைச் சுற்றியிருக்கும் புறச்சவ்வு.

chorionic villi : கருப்பை புறத்தோல் துய்யிழை : கருப்பையின் புறத்தோலிலுள்ள மயிர் போன்ற இழை. இதிலிருந்து நச்சுக் கொடியின் முதிர் கருப்பகுதி உருவாகிறது.

chorionic villus biopsy : கருப்பைத் துய்யிழை ஆய்வு : பேறுகாலத்திற்கு முந்திய பல் வேறு கோளாறுகளுக்காகக் கருப்பைப்புறத்தோல் துய்யிழையில் செய்யப்படும் உயிர்ப்பொருள் ஆய்வு.

chorionic villus sampling : கருப்பை உயிரணு மரபணுச் சோதனை : கருவுற்றபின் 9-11 வாரங்களில் புறஒலி வழிகாட்டு தலின் கீழ், பேறு காலத்துக்கு முந்தி நோயைக் கண்டறியும் ஒரு நடைமுறை. இதில் கருக் கொடியிலிருந்து எடுக்கப்படும் கருப்பை உயிரணுக்ளை மரபணு இயல்புபிறழ்ச்சி இருக் கிறதா என்பதை ஆராய்தறிதல்.

chorioretinal : கருப்பை-கண் விழிப்புறத்திரை : கருப்பைப் புறத்தோல் மற்றும் கண்விழிப் பின்புறத்திரை தொடர்புடைய.

chorioretinitis : கருப்பைப் புறத்தோல் கண் விழித்திரை அழற்சி : கருப்பைப் புறத் தோலிலும் கண்விழிப் பின்புறத் திரையிலும் ஏற்படும் வீக்கம்.

chorioretinopathy : கருப்பைப் புறத் தோல்-கண் விழித்திரை நோய் : கருப்பைப்புறத்தோல் கண் விழிப் பின்புறத் திரை இரண்டையும் பாதிக்கும் ஒரு நோய்.

choristoma : திசுத்திரட்சி : இயல்புமீறிய பகுதியில் அமைந்துள்ள இயல்பான திசுத்திரட்சி.

choroid : கண் கரும்படலம்; கரு விழிப்படல ஊடு சவ்வு : விழித் திரைப்படலத்தின் தொடர்ச்சியாக இருக்கும் கண் விழியின் பின்பக்கத்தின் நடுப்பகுதியில் ஆறில் ஐந்து பகுதியாக அமைந்துள்ள நிறமியான செல்குழாய்ப் படலம். இது வெளிப்புறம் வெண்விழிக் கோளத்தின் புறத் தோலுக்கும், உட்புறம் கண் விழியின் பின்புறத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஒளிக்கதிர்கள் ஊடுருவு வதைத் தடுக்கிறது.